• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரேசன் கடைகளில் சர்வர் கோளாறு காரணமாக கைரேகை பதிவு பெறுவதில் சிக்கல் – மக்கள் அவதி

March 11, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் ரேசன் கடையில் பொருட்கள் வாங்க பயோமெட்ரிக் கருவி மூலம் கைரேகை பெறப்பட்டு அதன் பின் வழங்கப்படுகிறது. தற்போது சர்வர் கோளாறு காரணமாக கைரேகை பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது.இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர்.

ஒன்றிய அரசு நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் கார்டில் பதிவு செய்யப்பட்டுள்ள குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஒருவர் நேரிடையாக ரேசன் கடைக்கு சென்றால் மட்டுமே பொருட்கள் கிடைக்கும்.

கோவை மாவட்டத்தில் மொத்தம் 1,419 ரேசன் கடைகள் உள்ளன.இந்த ரேசன் கடைகளுக்கு பயோமெட்ரிக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்திற்காக ரேசன் கடைகளில் பயோ மெட்ரிக் கருவி மூலம் கைரேகை பதிவு செய்யும் பணிகள் நடந்து முடிந்தது. அதன் பின் தற்போது ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்கும் போது ஒவ்வொரு முறையும் கைரேகை பதிவு பெறப்பட்டது. இந்த கருவிகளில் இணையதள வேகம் குறைவாக உள்ளது. மேலும் தொழில்நுட்ப கோளாறும் அடிக்கடி ஏற்படுகிறது.

இதன் காரணமாக பொதுமக்களின் கைரேகையை பதிவு செய்வதில் காலதாமதம் ஏற்படுவதால் மக்கள்அவதி அடைந்து வருகின்றனர். ரேசன் கடைகளுக்கு சென்றுவிட்டு பொருட்கள் வாங்காமல் மக்கள் வரும் சூழ்நிலை நிலவி வருகிறது.இதனால் ரேசன் கடை ஊழியர்களிடமும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் ஊழியர்களும் பாதிப்படைகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,

‘‘இந்த புதிய திட்டத்தின் கீழ் குடும்ப உறுப்பினர்கள் யாராவது ஒருவர் ரேசன் கடைக்கு நேரில் சென்றால் மட்டுமே பொருட்கள் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தொழில்நுட்ப கோளாறு குறித்து உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த பிரச்சனை சரிசெய்யப்படும்,’’ என்றார்.

மேலும் படிக்க