March 12, 2022 தண்டோரா குழு
நிலுவையில் உள்ள வழக்குகள் விரைந்து முடிக்க கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
கோவை மாவட்டத்தில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு வசதியாக தேசிய சட்ட பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்படி தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்டத்தில் நடைபெற்றது.
கோவை நீதிமன்றம் முதன்மை மாவட்ட நீதிபதி சக்திவேல்,சிபிஐ நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜ்,5வது கூடுதல் மாவட்ட நீதிபதி ராமகிருஷ்ணன், மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு செயலாளர் கிரிஷ்ணபிரியா மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர் எம்.எஸ் ரமணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இதில் மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், உரிமையியல் வழக்குகள், குடும்ப பிரச்சினை குறித்த வழக்குகள்,தொழிலாளர் பிரச்சினை குறித்த வழக்குகள்,சமரச குற்ற வழக்குகள்
தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணப்பட்டு வருகிறது.
இதன் மூலம் வழக்குகளுக்கு மேல் முறையீடு செய்ய இயலாது. அதுபோல் தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணப்படும் வழக்குகளுக்கு ஏற்கனவே செலுத்தியுள்ள நீதிமன்ற கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.இதனால் வழக்கு தரப்பினர்கள் நீதிமன்றங்களுக்கு வருவதால் ஏற்படும் கால விரயம் மற்றும் பண செலவை தவிர்க்கலாம்.
இது தவிர நீதிமன்றத்தில் இல்லாத வழக்குகளையும் கொடுக்கலாம் இங்கு இரு தரப்பினரும் பேசி வழக்குகளை முடிவுக்கு கொண்டுவர இந்த தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்று வருகிறது.