March 12, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய கட்டிடங்கள் உள்ளது.இதில் சமூகநலத்துறை,உணவு பாதுகாப்புதுறை, குழந்தைகள் நலத்துறை, இ சேவை மையம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், ஆவண காப்பகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.
இந்த கட்டிடத்தின் பின்புறம் பகுதியில் அரசு துறையின் பயன்படுத்தாத வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.தொடர்ந்து அப்பகுதியில் செடி கொடிகள் என குப்பை மேடாக சுத்தம் செய்யப்படாமல் இருக்கிறது.அன்மையில் பயன்படுத்தப்படாத கட்டிடத்தின் உள்ளே பாம்பின் தோள்கள் கிடந்த நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாகனம் நிறுத்தும் இடத்தில் இருந்து 5அடி நீளமுள்ள பாம்பு ஒன்று புதற்குள் போகும் காட்சி வைரலாக வருகிறது.
இதனால் அரசு ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சுற்றித்திரியும் பாம்பை பிடிக்க வேண்டும் எனவும் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குப்பை மேடுகளை சுத்தம் செய்ய வேண்டுமென அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.