March 12, 2022 தண்டோரா குழு
இருதயம் ஒரு மனிதனின் இன்றியமையாத உடல் உறுப்பாகும். உடலில் இயங்குகின்ற உறுப்புகளில் இருதயத்தின் செயல்பாடு இன்றியமையாதது. இருதயம் சிறு கோளாறு ஏற்பட்டாலும் அதனை உடனடியாக மருத்துவரை பார்த்து மருத்துவம் பார்த்து குணமாக்கவேண்டும்.
இந்த நிலையில் இருதயம் செயலிழந்தும், நாளம் பழுதாகியும் திருப்பூர் மூதாட்டி பொண்ணம்மாள் (வயது 72) மூச்சு திணறலோடு நெஞ்சு வலியோடு கோவை கே.ஜிமருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்து இருதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் மூதாட்டியின் உடல் ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்ய வலு இல்லாததனை தெரிந்து நாட்டிலேயே முதன் முறையாக நவீன தொழில் நுட்பத்துடன் அறுவை சிகிச்சை செய்ய இருதய அறுவை சிகிச்சை குழு நிபுணர்கள் திட்டமிட்டிருக்கின்றனர்.
அதனடிப்படையில் இடது புறம் உள்ள இதயத்தை வலது புற விலா பகுதியில் சிறு துளையிட்டு அறுவை சிகிச்சை செய்ய நிபுணர்கள் குழு முடிவெடுத்தனர். மூதாட்டிக்கு “ரைட் ஆக்ஸிலரி அப்ரோஷ்” முறையிலான அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டு முந்தைய வாரத்திலே அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கின்றன.
வயது மூப்பு உடையவர்கள், உடல் சக்தி குறைபாடுள்ளவர்கள் இருதய கோளாறால் ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்கின்ற நிலையில் அவர்களுக்கு நெஞ்சை பிளந்து சிகிச்சை மேற்க்கொண்டால் எழும்பு கூடவும் மூன்று மாதங்கள் தேவைப்படுகின்றன, சளி பிடித்தால் உடல் உபாதைகள் நெருக்கடியை தருகின்றன.
இந்த நிலையில் உடல் மெலிந்து ஓபன் ஹார்டு சர்ஜரிக்கு உகந்தாத உடல் நிலையுடன் இருந்த மூதாட்டிக்கு இந்த வழிமுறையில் ரைட் ஆக்ஸிலரி அப்ரொச் நவீன முறையிலே சிறு துளை அறுவை சிகிச்சை மருத்துவர்கள் செய்திருக்கின்றனர். விலா எழும்பில் நான்கு செண்டி மீட்டர் துளையிட்டு குதிரை திசு நாளத்தை மூதாட்டிக்கு பொறுத்தினர்.
மூதாட்டி நலமாக இருக்கின்றார். பழுதான நாளத்தை மாற்ற ஓபன் ஹார்ட் சர்ஜரியே நடக்கின்ற நிலையில் நாட்டிலேயே முதன் முதலாக இடது புற இதயத்தை ரைடு ஆக்ஸிலரி அப்ரோச் முறையில் சிறு துளை அறுவை சிகிச்சை மூதாட்டிக்கு நாளம் மாற்றி அறுவை சிகிச்சையில் குதிரை திசு நாளம் பொறுத்தி நவீன அறுவை சிகிச்சையின் செய்திருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இந்நிலையில்,கேஜி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பக்தவத்சலம் மூதாட்டிக்கு சால்வை அணிவித்து நலம் விசாரித்து
மரியாதை செய்தார். பின்னர் இந்த சிகிச்சை குறித்து செய்தியாளர்களிடம் எடுத்துரைத்தார். அப்போது இருதய அறுவை சிகிச்சை மருத்துவர் அருண்குமார் உடன் இருந்தார்.