March 13, 2022
தண்டோரா குழு
கோவையில் 5 வயது சிறுவன் 12 மண் பானைகள் மீது நடந்தபடி 12 மணி நேரம் தொடர்ந்து இரட்டை சிலம்பம் சுற்றி சாதனைப்படைத்துள்ளார்.
கோவை சரவனம்பட்டி பகுதியை சேர்ந்த அருண்குமார்,காவியா தம்பதியரின் 5வயது மகன் சஞ்சீவ்.இவர் சிறு வயதில் இருந்து சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள முல்லை தற்காப்பு மற்றும் விளையாட்டு கழகத்தில் சிலம்பம் அடிமுறை கலைகளை ஆர்வாகமாக கற்று வந்துள்ளார்.
இந்நிலையில் கோவை கணபதி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் சிறுவன் சஞ்சீவ் 12 மண் பானைகள் மீது நடந்தபடி தொடர்ந்து 12மணி நேரம் இரட்டை சிலம்பம் சுற்றி சாதனையை நிகழ்த்தியுள்ளார்.இவரது இந்த சாதனை நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. தொடர்ந்து சிறுவன் சஞ்சீவை பாராட்டி வெற்றி பதக்கங்கள் வழங்கப்பட்டது.