March 14, 2022
தண்டோரா குழு
சிறந்த மாவட்ட திறன் திட்டம் மற்றும் செயலாக்கத்திற்கான விருதில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனுக்கு இரண்டாம் இடம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் மாவட்ட ஆட்சியர் மாநாடு 2022 தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செய்த மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் விருதுகளை வழங்கினார்.
அதன்படி, 2021ம் ஆண்டு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையில், சிறந்த மாவட்ட திறன் திட்டம் மற்றும் செயலாக்க விருது மூன்று மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டது. அதில் இரண்டாவது இடமாக கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. முதலிடம் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கருக்கும், மூன்றாம் இடம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜுக்கும் வழங்கப்பட்டது.