March 14, 2022 தண்டோரா குழு
தமிழகத்திலேயே ஒரு ஏக்கர் பரப்பளவில்,நாட்டு மரங்கள் உட்பட 450 க்கும் மேற்பட்ட வகைகளில் 15 ஆயிரம் தாவர வகைகளை கொண்ட கோவை கார்டன் சென்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
கோவையில் சுமார் 150 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட டி, ஸ்டேன்ஸ் நிறுவனம் கலப்பு உரங்கள் மற்றும் விவசாய இடு பொருட்களை தயாரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது நவீன கால மாற்றத்திற்கு தகுந்த படி தோட்டங்கள் மற்றும் வீடுகளுக்கு தேவையான செடிகளை விற்பனை செய்யும் வகையில் கார்டன் சென்டர் எனும் புதிய தோட்டக்கலை மையத்தை டி, ஸ்டேன்ஸ் நிர்வாகம் துவக்கியுள்ளது.
சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த மையத்தில், அனைத்து விதமான செடிகள், தொட்டிகள், விதைகள், உரங்கள் தோட்ட கருவிகள் மற்றும் நவீன கால மாற்றத்திற்கு ஏற்ப வீடுகளில் மாடித்தோட்டம் அமைப்பது பராமரிப்பது தோட்ட பராமரிப்பு மற்றும் இயற்கை தோட்ட அமைப்பு போன்றவற்றிற்கு ஆலோசனை வழங்கும் வகையில் இந்த மையம் துவங்கப்பட்டுள்ளது.
கோவை திருச்சி சாலையில் நடைபெற்ற , இதன் துவக்கவிழாவில்,பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ வானவராயர், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர்.
கார்டன் சென்டர் குறித்து, டி, ஸ்டேன்ஸ் இயக்குனர் லட்சுமி நாராயணசாமி, மற்றும் நிர்வாகிகள் கல்யாணி நாராயணசாமி, ஜான்சன், ஜான் மேத்யூ ஆகியோர் கூறுகையில்,
இந்த மையத்தில் 15 வகையான இயற்கை உரங்கள் உள்ளது. மண்வளத்தை அதிகரித்தால் தான் தாவரங்கள் நன்கு வளரும், அவ்வாறு ஒரு விதை முளைப்பதில் இருந்து அறுவடை வரையில் தாவரத்தை பாதுகாப்பதற்கான பொருட்களை எங்கள் நிறுவனம் தயாரித்து வருவதாக தெரிவித்தனர்.
தமிழகத்திலேயே மிக பெரிய கார்டனை தாவரங்களுக்காக, 1 ஏக்கர் பரப்பளவில், 450க்கும் மேற்பட்ட வகைகளில் 15 ஆயிரம் தாவரங்களை வைத்து பராமரித்து, தோட்டக்கலை தொடர்பான விதைகள், காய்கறிகள், உரங்கள்,தோட்டக்கருவிகள் மற்றும் இது தொடர்பான ஆலோசணைகள் என அனைத்தும் ஒரே கூரையின் கீழ் கிடைக்கும் மையமாக இருப்பதால் தமிழக அளவில் இந்த கார்டன் சென்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது குறிப்பிடதக்கது.