March 15, 2022
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு சங்கத்தின் மாநில தலைவர் பழனிவேலு தலைமையில் நடைபெற்றது.
இதில் கோவை மாவட்ட சங்க தலைவராக டேனியல் விஜயகுமார், செயலாளராக ஆல்பர்ட் அலெக்ஸ் சாண்டர், பொருளாளராக பன்னீர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அதே போல் துணைத்தலைவர்களாக அருளானந்தம்,ராஜன், இணைச்செயலாளர்களாக ஜேம்ஸ் கென்னடி, ஜோஸ்வா, சங்கர் கணேஷ், மகளிரணி தலைவியாக அக்சீலியா இமாகுலேட் தீபா, மகளிரணி ஒருங்கிணைப்பாளராக கீதா, மகளிரணி செயலாளராக பிரியதர்ஷினி, மாவட்ட ஒருங்கிணைப்பாளராக ராம்குமார் போன்றவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.
இதில் மாநில துணைத்தலைவர் சுரேஷ்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர் ரவி, விருதுநகர் மாவட்ட இணைச்செயலாளர் சோமசுந்தரம் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.