• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அன்னூரில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளுக்கான சுய வேலைவாய்ப்பு கடன் திட்ட விழிப்புணர்வு முகாம்

March 18, 2022 தண்டோரா குழு

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக சுய வேலைவாய்ப்பு கடன் திட்ட விழிப்புணர்வு முகாம் மாவட்ட தொழில் மையம் மூலம் அன்னூரில் நடத்தப்படுகிறது என ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

கோவை மாவட்டத்தில் சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் பொருட்டு மாவட்ட தொழில் மையம் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இத்திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு பிரத்யேகமாக ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) 2.30 மணியளவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

தகுதி வாய்ந்த தொழில் முனைவோர்கள் புகைப்படம், மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை விலைப்பட்டியல் மற்றும் திட்ட அறிக்கை ஆகிய ஆவணங்களுடன் வரும் பட்சத்தில் இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவேற்றப்பட்டு கடன் திட்ட விண்ணப்பம் உடனடியாக வங்கிக்கு பரிந்துரை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஆகவே புதிய தொழில் துவங்க ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்டு பயனடையலாம்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க