March 18, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளதாவது:
கோவை மாவட்டத்தில் தேசிய சுகாதார குழுமத்தில் செயல்பட்டு வரும் பல்வேறுத் திட்டங்களின் மூலம் பல்வேறு பணியிடங்கள் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை கோவை மாவட்ட இணையதள முகவரிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த பணியிடங்களுக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ள நபர்கள் கல்வி தகுதிக்கான கையொப்பம் இட்ட சான்றிதழ்களின் நகல்கள், முன் அனுபவ சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை வரும் 25ம் தேதி மாலை 5 மணிக்குள் பந்தைய சாலையில் உள்ள துணை இயக்குநர் சுகாதார அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்கலாம். மேற்படி பணிகளுக்கான நேர்முகத் தேர்வு அடுத்த மாதம் 4ம் தேதி காலை 10 மணிக்கு துணை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெறும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.