March 19, 2022 தண்டோரா குழு
சாதிய மோதலை உருவாக்கும் விதமாக பேசி ஆடியோ வெளியிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி,கோவை மாநகர காவல் ஆணையரிடம்,அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவையினர் புகார் மனு அளித்துள்ளனர்.
அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவை சார்பாக அதன் நிறுவன தலைவர் மனு நீதி சோழன் தலைமையில், சாதிய மோதலை ஊக்குவிக்கும் விதமாக பேசி ஆடியோ வெளியிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு வழங்கப்பட்டது.
மனுவில்,கோவையில் கோரிக்கைகளை முன்னிருத்தி கொங்கு நாடு மக்கள் எழுச்சிப் பேரவையினர் ஆர்ப்பாட்டம் நடத்துவதாகவும் அதற்கு ஆதரவு தருவதாக பேரவையின் செயலாளர் பார்த்திபன் என்பவருடன் திருப்பூர் மாவட்டத்தை சார்ந்த ஆடிட்டர் மலர்விழி என்ற நபர் தொலைபேசியில் பேசும் ஆடியோ சமூக வளைதளங்களில் பரவி வருகிறது.
அதில் எங்கள் சமூகமான ” தேவேந்திரகுல வோளாளர்” சமூகத்தின் சாதி சான்றிதழ் அரசாணை குறித்தும் சமூகத்தை பற்றியும் குறிப்பிட்டு பேசி எங்கள் சமூகத்தினரை இழிவு படுத்தியுள்ளார்.மேலும் ஏற்கனவே மேல்குறிப்பிட்ட நபர்கள் பல நேரங்களில் எங்கள் சமூகத்தின் மீது பல்வேறு சர்ச்சை கருத்துகளை பேசி உள்ளதாகவும்,எனவே குறிப்பிட்ட நபர் மீது கைது செய்யவும், மேலும் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் எங்கள் சமூகத்தை பற்றி பேசாத வண்ணம் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த நிகழ்வில் பிரபுக்குமார் பட்டக்காரர் , தங்கபாண்டி,செல்வம் மள்ளா் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.