March 20, 2022 தண்டோரா குழு
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், வளங்குன்றா அங்கக வேளாண்மைத் துறையில் இணையவழி மூலம் அல்லது நேரடியாக அங்கக வேளாண்மை பயிற்சி வரும் 22.03.2022 செவ்வாய்க் கிழமை அன்று காலை 9.30-1.00 மற்றும் 2.00-4.30 வரை நடைபெறவுள்ளது.
இப்பயிற்சியில் இயற்கை முறையில் பயிர் சத்துக்கள் மேலாண்மை , களை மேலாண்மை இயற்கை உரம் மற்றும் பூச்சி விரட்டி தயாரித்தல் ,இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு , அங்கக சான்றிதழ் பெறும் வழிமுறைகள் மற்றும் பங்கேற்பாளர்களின் உறுதியளிப்புத் திட்டம் பயிற்சி நடைபெற உள்ளது.
இதற்கான பயிற்சி கட்டணத்தை செலுத்தும் முகவரி பேராசிரியர் மற்றும் தலைவர் ( Professor and Head ) ரூ . 590 / – வங்கி விவரம் – ( ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா , தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக கிளை ( SBI , TNAU Branch – A / C.No.38918523789 , IFSC Code – SBIN0002274 மேற்கண்ட வங்கியில் பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பயிற்சியின் முடிவில் சான்றிதழ் மற்றும் தொழில்நுட்ப கையேடு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.22.03.2022 அன்று பயிற்சி துவங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்னர் இணையவழி இணைப்பு (Link) அனுப்பப்படும். தங்களின் மின்னஞ்சல் மற்றும் முகவரியை பின்கோடுடன் கீழ்க்கண்ட இத்துறையின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் மற்றும் தலைவர் வளங்குன்றா அங்கக வேளாண்மைத்துறை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர் – 641 003. மின்னஞ்சல் : [email protected] தொலைபேசி : 0422 6611206 , 0422 2455055
The Professor and Head Department of Sustainable Organic Agriculture : Tamil Nadu Agricultural University Coimbatore – 641 003 . Email : organicatnau.ac.in – Phone No. 0422 6611206 , 04222455055