• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உலக தலை காயம் தினத்தை முன்னிட்டு கோவை ராயல் கேர் மருத்துவமனை சார்பில் வாகன பேரணி

March 20, 2022 தண்டோரா குழு

உலக தலை காயம் தினத்தை முன்னிட்டு கோவை ராயல் கேர் மருத்துவமனை சார்பாக நடைபெற்ற இரு சக்கர வாகன பேரணியை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார்.

சாலை விதிகளை சரியாக கடைபிடிக்காமலும் , கைபேசி பேசிக்கொண்டு வாகனங்களை ஓட்டுவதாலும்,ஹெல்மெட் அணியாமல் வாகனங்களை ஓட்டுவதாலும்,மது அருந்தி ஓட்டுவதாலும்,விபத்துகள் மூலம் தலைக்காயங்கள் ஏற்படுகின்றன.

இந்நிலையில் தலைக்காயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,உலக தலைக்காயம் தினம் அனுசரிக்கப்படுகிறது.இதில் தலைக்காயம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்,கோவை ராயல் கேர் மருத்துவமனை சார்பாக ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்தார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் மாதேஸ்வரன்,

தலைக்காயங்களால் ஏற்படும் பாதிப்புகளும்,காயங்களால் ஏற்படும் உயரிழப்புகளை தடுக்கவும், சாலை விபத்துக்களின் எண்ணிக்கை குறைய ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த பேரணியின் முக்கிய நோக்கம் என தெரிவித்தார்.

காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் உள்ள ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சிட்டி யூனிட் முன்பாக துவங்கிய பேரணி, கணபதி சரவணம்பட்டி,காளப்பட்டி , செராயம்பாளையம் வழியாக நீலம்பூரில் உள்ள ராயல் கேர் மருத்துவமனை வரை சென்றடைந்தது.

விழாவில், மருத்துவர்கள் பால்வண்ணன் விஜயன் சிவகுமார் ரகு ராஜா பிரசாத் ஸ்ரீதேவி கார்த்திகேயன் தினேஷ் சிதம்பரம் செந்தில்குமார் குதித்துள்ளார் மருத்துவமனையின் சீனியர் மேனேஜர் மார்க்கெட்டிங் வெங்கடேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க