March 23, 2022
தண்டோரா குழு
சாக்கடைக்குள் இறங்கி துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்த விவகாரம் தொடர்பாக துப்புரவு பணி மேற்பார்வையாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு 78க்குட்பட்ட பேரூர் பிரதான சாலை ஐயுடிபி காலனி அருகில் துப்புரவு பணி மேற்பார்வையாளர் மாணிக்கம், ஒப்பந்த தூய்மை பணியாளர்களை எவ்வித பாதுகாப்பு உபகரணமின்றி சாக்கடையை சுத்தம் செய்ய அறிவுறுத்தினார்.இதனையடுத்து சாக்கடைக்குள் இறங்கி தூய்மை பணியாளர்கள் பணி சுத்தம் செய்தனர்.இது தொடர்பாக வீடியோ சமூக வளைதளங்களில் பரவியது.
இதையடுத்து துப்புரவு பணி மேற்பார்வையாளர் மாணிக்கத்தை தற்காலிக பணிநீக்கம் செய்து மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள மாநகராட்சி நகர்நல அலுவலர் சதீஷ்குமார் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.