• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்டத்தில் போதை பொருட்கள் முற்றிலுமாக தடுக்கப்படும் – புதிய எஸ்.பி.பத்ரிநாராயணன் பேட்டி !

March 24, 2022 தண்டோரா குழு

பெண்கள் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று கோவை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த செல்வநாகரத்தினம் சென்னை போலீஸ் பயிற்சி பள்ளி துணை இயக்குனராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.இதனை தொடர்ந்து கன்னியாகுமாரி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக இருந்த பத்ரிநாராயணன் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து, இன்று கோவை வந்த பத்ரி நாராயணன் கோப்புகளில் கையெழுத்திட்டு புதிய காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோவை மாவட்ட கண்காணிப்பாளராக இன்று பொறுப்பேற்றுள்ளேன். மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சிறந்த முறையில் கடைபிடிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். முக்கியமாக பெண்கள் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான புகார்கள் மீது உடனடி நடவடிக்கைப்படும்.

பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆண்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். கோவை மாவட்டத்தில் போதை பொருட்கள் முற்றிலுமாக தடுக்கப்பட்டு. போதைப்பொருள் கலாச்சாரத்தால் இளைஞர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன்.வழக்குகள் நிலுவையில் இருந்தால் அதை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்போம் என்றார்.

மேலும் படிக்க