March 24, 2022 தண்டோரா குழு
கோவையில் திடீரென சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழையால் சுமார் 1000க்கும் மேற்பட்ட வாழைமரங்கள் முறிந்து விழுந்ததால் விவசாயி வேதனை. அரசு உரிய இழப்பிடு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோடை வெயில் காலம் துவங்கும் முன்னரே தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் கோவையில் வெப்ப சலனம் காரணமாக மாலை வேலையில் கோவை மாவட்டத்தில் பல்வேரு பகுதிகளில் சூறை காற்றுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது.
குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய தொண்டாமுத்தூர், ஆனைகட்டி போன்ற பகுதிகளிலும் புறநகர் பகுதிகளான கருமத்தம்பட்டி, சூலூர், செட்டிபாளையம், அன்னூர், துடியலூர்,பெரியநாயக்கன்பாளையம், மதுக்கரை போன்ற பகுதிகளில் பலத்த சூறை காற்றுடன் மழைபெய்தது.
இந்நிலையில், கோவை, போத்தனூர் செட்டிபாளையத்தை அடுத்த மயிலாடும்பாறை பகுதியில் வீசிய பலத்த சூறைகாற்றால் அப்பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்ற விவசாயியின் வாழை தோட்டத்தில் வளர்க்கபட்டு இருந்த 1200 வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தும், முறிந்தும் விழுந்ததால் வேதனை அடைந்துள்ளார்.
கேரளாவிற்கு சிப்ஸ் தயாரிப்பிற்காக ஏற்றுமதி செய்ய 1200 நேந்திர வகை வாழை மரங்களை வளர்த்து பராமரித்து வருகிறார். இன்னிலையில் நேற்று வீசிய சூறாவளி காற்றில் வளர்க்கபட்ட வாழை மரங்கள் அனைத்தும் வேறோடும், முறிந்தும் சரிந்துள்ளதாகவும், இதனால் சுமார் ரூ.2.50 லட்சம் வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளதாவும் தெரிவித்தார் மேலும் அரசு பாதிப்புகளை கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் கேட்டுகொண்டார்.