March 24, 2022 தண்டோரா குழு
கோவை அரசு கலை கல்லூரியில் இலவச ஐ.ஏ.எஸ் குறித்தான கருத்தரங்கு நடைபெற்றது. Free IAS Exam coaching Center and Department of Political Science நடத்திய இந்த கருத்தரங்கில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இதில் மாணவர்களிடையே சிறப்புரையாற்றிய மாவட்ட ஆட்சியர் சமீரன்,நான் அரசு பள்ளியில் முழுவதும் படித்தேன். சிவில் சர்விஸில் செய்திதாள்கள் படிப்பது தான் முதல் படி. யூ.பி.எஸ்.இ தேர்வு என்பது நம்முடைய நடவடிக்கையை மற்றும் சமூக புரிதலை மையமாக கொண்டது. நாம் எப்போது பலவற்றை கற்றுக் கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
மேலும் மாவட்ட ஆட்சியர் அவர் கடந்து வந்த வாழ்க்கையையும், ஐ.ஏ.எஸ் பணி என்றால் என்ன என்பது குறித்தும் ஐ.ஏ.எஸ் ஆவதற்கு எவ்வாறு நாம் நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும் என்ற கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அவரிடம் சில மாணவர்கள் ஐ.ஏ.எஸ் குறித்தான கருத்துகளையும் சந்தேகங்களையும் பகிர்ந்து கொண்டனர். பின்னர் மாணவ மாணவிகளுக்கு புத்தகங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கோவை அரசு கல்லூரி முதல்வர் கலைசெல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.