March 26, 2022 தண்டோரா குழு
உலக மூளை முடக்கு வாத தினத்தை முன்னிட்டு இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தண்ணீர் மூலம் சிகிச்சை மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மூளை முடக்குவாதம் என்பது காயம் மற்றும் குழந்தைகளின் வளரும் நிலையில் இருக்கும் மூளையில் ஏற்படும் வடிவக்குறைபாடு காரணமாக ஏற்படும் முன்னேற்றமடையாத நரம்பியல் சிக்கலாகும்.இது குழந்தை பருவத்தில் ஏற்படும் தீவிரமான இயலாமைக்கு ஒரு மிகப்பொதுவான காரணமாகும்.இதனால் குழந்தைகளின் தசைகள் செயல்படாமல் நடக்க முடியாத வாய்ப்பு ஏற்படுகிறது.
உலக மூளை முடக்குவாத தினத்தை முன்னிட்டு பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறையானது கோவை சௌரிபாளையம் பகுதியில் எய்ம் குழந்தைகள் நல மையம் சார்பில் நடைபெற்றது.குழந்தைகள் நல பயிற்சியாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மூளை முடக்கு வாதத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நீச்சல் குளத்தில் தண்ணீர் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.
தொடர்ந்து இது குறித்து பேசிய பயிற்சியாளர் செந்தில்குமார்,
தற்போது இந்த மூளை முடக்கு வாதத்தினால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்அதிகரித்து கொண்டே வருகிறது.இதனை மக்கள் மத்தியில் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும், பொதுவாக வட மாநிலங்களில் மட்டுமே இம்மாதிரியான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தமிழகத்தில் தான் தண்ணீரின் பயிற்சி முறையை பின்பற்றி சிகிச்சை அளித்து வருவதாகவும் இதனால் குழந்தைகளின் இறுக்கமான தசைகளில் இருந்து விடுபட்டு செயல் அளிக்க செய்வதாக தெரிவித்தார்.
காலங்கள் எவ்ளோ மாறினாலும் மற்ற குழந்தைகளின் புன் சிரிப்பை போல் தன் குழந்தைகளையும் காண வேண்டும் என பெற்றோர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.