March 26, 2022
பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் கோவையில் நடைபெற்ற நேரடி கடன் வழங்கும் முகாமில், பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு சுமார் 40 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளுடன் பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் வழங்கி வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் கோவை வட்டாரம் சார்பாக கடன் உதவி வழங்கும் முகாம் ராம்நகர் பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. வங்கியின் சென்னை மண்டல மேலாளர் பி.மகேந்தர் முகாமில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கடன் தொகைக்கான காசோலையை வழங்கினார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
எங்களது வங்கி மூலம் பல்வேறு கடன்கள் வழங்கப்படுகிறது. குறிப்பாக, வீட்டு கடன்,தொழில் முனைவர் மற்றும் கல்வி,வாகனம், என அனைத்து துறைகளிலும் கடன் வழங்கி வருவதாகவும்,வங்கியில் பெறும் கடன்களை,பயனாளிகள் தவணை மாறாமல் செலுத்த வேண்டும் என கேட்டு கொண்ட அவர்,அப்போதுதான் தொடர்ந்து வங்கிகள் அதிக கடன்களை வழங்க முடியும் என தெரிவித்தார்.
மேலும் எங்களது வங்கியில் பெற்ற கடனை ஒரே முறையில் திருப்பி செலுத்தும் ஒரு முறை தீர்வு இருப்பதால் இதிலும் கடன் பெற்றவர்கள் கடனை திருப்பி செலுத்தி தீர்வு காண முடியும் என தெரிவித்தார்.இந்த முகாமில் ஒரு முறை தீர்வு பயனாளிகளும் பயன் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.
முன்னதாக நடைபெற்ற கடன் உதவு முகாம் துவக்க விழாவில், கோவை வட்டார தலைவர் .இராமநாதன் மற்றும் உதவி பொது மேலாளர்கள் கங்காதர் பிரசாத், சரவணன் மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.