March 28, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்போர், தொழில் முனைவேர்கள் போன்றவர்களை ஊக்குவித்து அவர்களை மீன் வளர்ப்பில் ஈடுபட செய்திடும் நோக்கில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கான பயனாளிகள் பங்களிப்பு திட்டங்கள் மற்றும் தொழில் முனைவோரின் மாதிரி திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. மீனவர்கள், மீன்வளர்ப்பபேர், சுய உதவிக்குழுக்கள், கூட்டு பொறுப்புக்குழுக்கள், மீன்வளர்ப்பேர் உற்பத்தியாளர் அமைப்புகள், தனி நபர் தொழில் முனைவோர், தனியார் நிறுவனங்கள் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ் பொது பிரிவினருக்கு 40 சதவீதம், ஆதிதிராவிடர் மற்றும் பெண்களுக்கு 60 சதவீதம் மானியமாக வழங்கப்படும். மேலும் தொழில் முனைவோர்களுக்கு பொது பிரிவினருக்கு 25 சதவீதம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மகளிருக்கு 30 சதவீதம் மத்திய மற்றும் மாநில அரசின் நிதியுதவிகள் வழங்கப்படும்.இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர், எண் 41 சோமு காம்ப்ளக்ஸ், 1- இஸ்மாயில் தெரு, சி.எஸ்.ஐ. பள்ளி அருகில், டவுன் ஹால், கோவை – 641 001 என்ற முகவரியில் உள்ள கோயம்புத்தூர் மீன்வளஆய்வாளர் (தொலைபேசி எண்.9655506422) அலுவலகத்தினை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு கூறியுள்ளார்.