• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வலுவான வணிக திறன் வளர்ச்சியில் தொடர்கிறது டாடாவின் ஏஐஏ லைப்

March 28, 2022 தண்டோரா குழு

டாடா ஏஐஏ லைப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், இந்தியாவில் மிக வேகமான வளர்ச்சியை எட்டி வரும் காப்பீட்டு நிறுவனம்.

2021 – 22 நிதியாண்டின் முன்றாவது காலாண்டில் 1193 கோடி ரூபாய் பிரிமியமாக வசூலித்து 44 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. 2021 முன்றாவது காலாண்டில் 831 கோடி பிரிமீயம் பெற்றிருந்தது.டிசம்பர் 2021 உடன் முடிவடைந்த ஒன்பது மாத கால அளவில் 2,110 கோடி ரூபாய் வசூலித்திருந்தது.டிசம்பர் 22 ஒன்பது மாத கால அளவில்,32 சதவீத வளர்ச்சியை எட்டி 2786 கோடியை தனிநபர் காப்பீட்டு பிரிமியமாக வசூலித்துள்ளது.

ஒட்டுமொத்த வணிக பிரிமீயம், டிசம்பர் 2021 ல், ஒன்பது மாத கால அளவில் 2766 கோடியிலிருந்து டிசம்பர் 2022ல் 3652 கோடியாக 32 சதவீதம் வளர்ச்சி பெற்றது.இதே கால அளவில் ஒட்டுமொத்த பிரிமியம் வருவாய், 7,035 கோடியிலிருந்து 27 சதவீதம் வளர்ச்சி பெற்று 8097 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

நிதியாண்டு 2022 ன் 3வது காலாண்டில், டாடா ஏஐஏ லைப், சில்லறை வணிக பாதுகாப்பில் 89 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது.இதன் மதிப்பு 102,520 கோடி ரூபாய். கடந்த நிதியாண்டின் இதே கால அளவை காட்டிலும் இது 148 சதவீதம் வளர்ச்சியாகும்.சந்தை பங்கானது,13.1 சதவீதம் லிருந்து 25.4 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது. தனியார் காப்பீட்டு நிறுவனங்களில் டாடா ஏஐஏ முன்னிலை பெற்றுள்ளது.

ஒட்டுமொத்த சொத்து மேலாண்மை, 31 டிசம்பர் 20220 ல் 43,033 கோடியிலிருந்து 31 டிசம்பர் 2021 ல் 55,492 கோடி ரூபாயாக 29 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.டாடா ஏஐஏ வின் அடிப்படை தத்துவத்தின் முடிவுகள் இவை. பாலிசிதாரர்களுக்கு நீண்ட கால அடிப்படையிலான நிலையான வருவாயாக இது அமைந்துள்ளது.முன்னணி நிதி தரவு முகவரான மார்னிங்ஸ்டார், டாடா லைப் சொத்து மேலாண்மையில் உள்ள நிதிக்கு 4 ஸ்டார் அல்லது 5 ஸ்டார் தரவரிசையை அளித்துள்ளது. ஐந்தாண்டுகளின் அடிப்படையிலான மார்னிங்ஸ்டார் நட்சத்திர தரவரிசையில், முந்தைய கால கட்டத்தில் 82 சதவீதத்தி லிருந்து 99.93 சதவீதம் தர வரிசைக்கு உயர்ந்து, 5 நட்சத்திர தர அளவை எட்டியுள்ளது.

டாடா ஏஐஏ லைப் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் நவீன் தகில்யானி,

“21 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட டாடா ஏஐஏ லைப், ஒரு நம்பகமான காப்பீட்டு தீர்வை அளிக்கும் நிறுவனமா திகழ்ந்து வருகிறது. எளிமையான, வெளிப்படையான, வாடிக்கையாளர்களின் திருப்திகரமான சேவையை அளித்து வருகிறது. மிக வலிமையான கிளைம்களை அளித்து வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கு சிறப்பான உதவியை வழங்கி வருகிறது. மிகவும் மோசமான நிலையிலும் அதிக மதிப்புகளை வாடிக்கையாளர்களுக்கும், பங்குதாரர்களுக்கும் வழங்கியுள்ளது,” என்றார்.

டாடா ஏஐஏ லைப், சமீபத்தில் 18 மாநிலங்களில் 100க்கும் மேற்பட்ட கிளைகளை டிஜிட்டல் மயமாக்கியுள்ளது.வாடிக்கையாளர்களின் சந்திப்பு இடமாகவும், விரிவாக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாகவும் இது திகழ்கிறது. அனைத்து கிளைகளும் டிஜிட்டல் தீர்வுகளையும், காகிதமில்ல இயக்கத்தையும் மேற்கொண்டுள்ளது.வாடிக்கையாளர்கள், கிளை அலுவலர்களுடன் காணொளியிலும்,நேரடியாக சந்தித்தும் உதவிகளை பெறலாம்.கிளைகளுக்கு நேரடியாக சென்று சுயசேவை அடிப்படையில் டிஜிட்டல் முறையில் தங்களது தேவையை பெறலாம்.

ஆன்லைன் முறையில் வாடிக்கையாளர்கள் எளிதான முறையில் அனைத்து உதவிகளையும் பெறும் அனுபவத்தை உருவாக்கியுள்ளது. பாலிசி தொடர்பான அனைத்து தகவல்களையும் விரல் நுனியில் அறிய தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இன்னும் பல வசதிகளை உருவாக்கி, எதிர்காலத்தில் வாடிக்கையாளர்கள் பயன்பெற உருவாக்க திட்டமிட்டுள்ளது.

மேலும் படிக்க