• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் புற்றுநோய் மையத்தை துவங்கிய சென்னை எம்ஜிஎம் ஹெல்த் கேர் !

March 29, 2022 தண்டோரா குழு

கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எழுத்தாளர் மற்றும் பொது பேச்சாளரான ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன்,பெண் மருத்துவர்களிடம், மார்பகம் மற்றும் கர்ப்பபை வாய் புற்றுநோய்க்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கொள்ளும் போது எளிதான அணுகுமுறையை பெற முடியும் என தெரிவித்துள்ளார்.

சென்னை எம்.ஜி.எம்.புற்றுநோய் சிகிச்சை சிறப்பு மையம் தன்னுடையை சேவையை விரிவு படுத்தும் விதமாக கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பொன்னையா மருத்துவமனையுடன் இணைந்து துவக்கியுள்ளது. இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு மருத்துவமனை அரங்கில் நடைபெற்றது.

இதில்,எம்.ஜி.எம்.ஹெல்த் கேரின் மார்பக புற்று நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் வேதா பத்ம பிரியா,புற்றுநோய் அறுவை சிகிச்சை துறையின் மூத்த நிபுணர் டாக்டர் சிவகுமார் மகாலிங்கம், பொன்னையா மருத்துவமனையின் மருத்துவர்கள் கோபிநாத்,மனோபிரியா ஆகியோர் பேசினர். கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்கள் தரமான குறைவான கட்டணத்தில் மருத்துவ சேவையை பெறும் விதமாக இந்த மையம் இன்று துவங்கி உள்ளதாகவும் குறிப்பாக,மேமோ ஆன் வீல்ஸ் எனும் நடமாடும் புற்றுநோய் பரிசோதனை மையத்தில், கோவையின் பல்வேறு பகுதிகளுக்கும் நேரடியாகச் சென்று பெண்களுக்கு பரிசோதனை செய்ய உள்ளதாகவும் குறிப்பாக இங்கு பரிசோதனை செய்யும் ரேடியோலஜிஸ்ட் மற்றும் நிபுணர்கள் முழுவதும் பெண்களாக இருப்பதால் பெண்கள் தயக்கமின்றி இங்கு பரிசோதனை செய்து கொள்ளலாம் என தெரிவித்தனர்.

முன்னதாக நிகழ்ச்சியில்,பிரபல பெண் எழுத்தாளரும்,பொது பேச்சாளரும் ஆன ஜெய்ந்த ஸ்ரீ பாலகிருஷ்ணன், மார்பகம் மற்றும் கர்ப்பபை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்கள் ஆண் மருத்துவர்களால் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் செய்து கொள்ள சில நேரங்களில் தயக்கம் ஏற்படுவதால்,பெண் மருத்துவர்களிடம் பரிசோதனை மற்றும் சிகிச்சை பெறுவதால் எளிதான அணுகுமுறையை பெற முடிவதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க