• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நோக்கியா சி01 பிளஸ் 2+32ஜிபி வகை போன் அறிமுகம் !

March 30, 2022 தண்டோரா குழு

நோக்கியா போன்களில் இல்லமான எச்எம்டி குளோபல், நோக்கியா சி01 பிளஸ், தற்போது 32ஜிபியுடன் வியத்தகு சிறப்பம்சங்களுடன் புகழ்மிக்க இந்த போன் அனைவரும் வாங்கும் விலையில் வெளியாகியுள்ளது. ஆரம்ப நிலையில் இந்த போனின் விலை பட்ஜெட் விலையில் கிடைக்கும்.

பழமையான, குறைந்த வேகத்தில் இயங்கும் போன்களுக்கு மாற்றாக மேன்மைப்படுத்தப்பட்ட போன் வாங்க விரும்புவோருக்கு நோக்கியா சி01 பிளஸ் ஒரு நம்பத்தன்மையான போன். ஓராண்டு வரை மாற்றத்தக்க உத்தரவாதம், ஜியோவின் தனித்துவமிக்க சலுகை, உடனடி ரொக்க சலுகை 600 ருபாய் உள்ளிட்டவை அறிமுக சலுகையாக பெறலாம்.

எச்எம்டி குளோபல் துணைத்தலைவர் சன்மீட் சிங் கோச்சர் கூறுகையில்,

“கடந்த பல ஆண்டுகளாக நோக்கியோ ஸ்மார்ட் போன் உருவாக்குவதிலும்,வாடிக்கையாளர்களின் பன்னோக்கு வாய்ப்புமிக்க போன் தரவும் முனைப்பு காட்டினோம். இதன் விளைவாக, குறைந்த பட்ஜெட் விலையில் நோக்கியோ சி தொடர் உருவாகியுள்ளது. ஈடு இணையற்ற தரம், நீண்ட உழைப்பு, அதோடு நோக்கியா பொருட்களின் நம்பகத்தன்மை கொண்டது. கடந்த ஆண்டு அறிமுகமான 2ூ16ஜிபி வகை, எங்களது வாடிக்கையாளர்களிடையே நல்ல மதிப்பினை பெற்றுள்ளது. தற்போது அறிமுகமாகியுள்ள வகை 32ஜிபி வரை சேமிக்கும் திறனும் வாடிக்கையாளர்களின் சிறந்த தேர்வாகவும் திகழ்கிறது,” என்றார்.

சிறப்பம்சங்கள் :

காணொளி சந்திப்பு, தெளிவான படம் நெருக்கமான உணர்வை ஏற்படுத்துகிறது. இரவிலும் பகலிலும் நினைவுகளை பகிர்ந்து கொள்ள முடியும். குழந்தைகளுடன் குதுகாலமாக திரைப்படங்களை காண பொருத்தமான கச்சிதமான திரை உதவுகிறது. உயர்தர படங்கள், நோக்கியா சி01 பிளஸ், அழகான நினைவுகளை படம் பிடித்து உறுதி செய்யும்.

தற்போதுள்ள இணையத்தள உலகில், உங்களது தகவல்களை பாதுகாப்பதில் சி02 பிளஸ், மிகவும் கடுமையாக செயல்படும். குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு அவ்வப்போது மேற்கொள்ளப்படும் மேம்பாடுகள், உங்களது தரவுகளையும் நினைவுகளையும் பாதுகாப்பாக வைத்திருக்கும்.

வேகமும் இதன் காரணி:
ஆக்டா கோர் புரசாஸர், பரபரப்பான வாழ்க்கை முறைக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்ட் 11 பதிப்பு, வேகமான செயல்பாட்டினை தருகிறது. 4ஜி எல்டிஇ விரைவான காணெளியை ஏற்படுத்தி, தினசரி அனுபவத்தை மாற்றுகிறது. நாள் முழுவதும் தினசரி பயன்பாட்டிற்கு பேட்டரியின் ஆயுள் உதவுகிறது.

விலையும் கிடைக்கும் இடமும்:

நோக்கியோ சி01 பிளஸ், நீலம் மற்றும் சாம்பல் நிறங்களில் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இன்று முதல் கிடைக்கும் இந்த போன், 2/16ஜிபி மற்றும் 2/32 ஜிபி அமைப்புடன் ஆரம்ப விலையாக 6299 மற்றும் 6799 ருபாய் விலையில் கிடைக்கிறது. சில்லறை விற்பனை கடைகளிலும், மின் வணிக தளங்களிலும், நோக்கியா.காம் இணையத்தளத்திலும் பெறலாம். ஜியோ தனித்துவமிக்க சலுகையில் 600 ருபாய் சலுகையை பெறலாம். மைஜியோ செயலி வழியில் இதை பெறலாம். ஜியோ வாடிக்கையாளர்கள் 299 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து, 4000 ருபாய் வரை, மின்ட்ரா, பார்ம்இஸி, ஒயோ மற்றும் மேக்மைட்ரிப் போன்றவைகளில் சலுகை பெறலாம்.

மேலும் படிக்க