March 30, 2022
தண்டோரா குழு
கோவை மாநகராட்சியில் உள்ள ஐந்து மண்டல தலைவர்களுக்கான தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட உறுப்பினர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் திமுக கூட்டணி 97 வார்டுகளையும், அதிமுக 3 வார்டுகளையும் கைபற்றியது.இந்நிலையில் மண்டல தலைவர்களுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.இதில் திமுகவில் வடக்கு மண்டலத்திற்கு கதிர்வேல்,தெற்கு மண்டலதிற்கு தனலட்சுமி,கிழக்கு மண்டலத்திற்கு லக்குமி இளஞ்செல்வி, மேற்கு மண்டலத்திற்கு தெய்வானை தமிழ்மறை, மத்திய மண்டலத்திற்கு மீனா லோகு ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.
திமுக கூட்டணியில் வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்த 5 பேரும் மண்டல தலைவர்களாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா சான்றிதழ்களை வழங்கினார்.
கோவை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள கதிர்வேல் ஆட்டோ ஒட்டுநனர்.ஏழ்மையான குடும்ப பின்னனி கொண்டவர்.இவர் கோவை மாநகராட்சி 10வது வார்டில் போட்டியிட்டு கவுன்சிலராக வெற்றி பெற்றார்.