March 31, 2022 தண்டோரா குழு
உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு மிகச்சரியானது எனவும் இதனை தமிழக அரசு பின்பற்றி பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு உயர்கல்வி,அரசு பணி உள்ளிட்டவைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் பிற்படுத்தப்பட்டோர் உரிமைக்கான கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யப்பட்ட நிலையில், பிற்படுத்தப்பட்டோர் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பாக, கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரத்தனசபாபதி, மற்றும் நிர்வாகிகள் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி வெள்ளிங்கிரி, வழக்கறிஞர் திருஞானம், வேலுசாமி, உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய அவர்கள்
இட ஒதுக்கீடு என்பது தமிழகத்தை பொறுத்தவரை பிற்படுத்தபட்டருக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. இதை கடந்த அதிமுக அரசும், தற்போதைய திமுக அரசும் அதையே கடைபிடித்து வருகிறது.மேலும் கடந்த காலங்களில் அம்பாசங்கர் அறிக்கை வைத்து குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டும் 16% இட ஒதுக்கீடு கொடுத்தார்கள்.மேலும் கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு 30 நிமிடங்கள் இருக்கும் முன்பு அதிமுக கூட்டனிக்காக குறிப்பிட்ட சமூதாயத்திற்கு 10.5% இட ஒதுக்கீடு அரசானை வெளியிடப்பட்டது.ஆனால், தற்போதைய திமுக அரசு மூலம் விடிவுகாலம் வரும் என நினைத்தோம் ஆனால் அதுவும் நடக்கவில்லை.
முதல்வரை சந்திக்க பலமுறை முயற்சித்தும் நடக்கவில்லை எனவும் பின்னர் உயர் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் முறையான ஆவணங்கள் வைத்து வழக்கு தொடர்ந்தோம் எனவும் நீதிமன்றம் எங்களின் வாதங்களை கேட்டு ஆலோசித்து 10.5% அரசானை ரத்து செய்தது, ஆனால் தற்போதைய திமுக அரசு உயர் நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 4 மேல் முறையீடு செய்தனர்.அது மட்டுமின்றி தலைசிறந்த வழக்கறிஞர்களை வாதாட நியமித்தனர்.இவர்கள் மட்டுமின்றி சம்பந்தப்பட்ட சமூதாயமும் மேல் முறையீடு செய்தனர்.
ஆனால் இன்று உச்ச நீதிமன்றம் மிகச்சரியான தீர்ப்பை வழங்கியுள்ளது.மேலும்
1985ம் ஆண்டுக்கு பின் எந்த மக்கள் கணக்கீடு தரவுகளின்றி இட ஒதுக்கீடு வழங்ககூடாது எனவும் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு தர முடியாது மேலும் எந்த தரவுகளுமின்றி ஒட்டுகளுக்காகவும், கூட்டணிகளுக்காகவும் மாற்றி மாற்றி ஒரு குறிப்பிட்ட இரண்டு சமுதாயத்திற்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்கியதாக குற்றச்சாட்டு வைத்தனர்.
மேலும் அரசியல் சட்டத்தின் அடிப்படையில் மக்கள் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு கல்வி, வேலை வாய்ப்பில் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஆனால் அதை இவர்கள் மீறியுள்ளார்கள். கல்வி,வேலை வாய்ப்புகளில், பிற்படுத்தப்பட்டோர் மக்களிடம் சரியான விழிப்புணர்வு இல்லாததால், இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.