• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இயக்குநர் சுராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் – தமன்னா

December 26, 2016 தண்டோரா குழு

“கத்தி சண்டை” படத்தின் இயக்குநர் சுராஜ் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், “நடிகைகள் காசு வாங்கினால் ஆடைகளைக் குறைத்துக் கொண்டுதான் நடிக்கவேண்டும்” என கூறியிருந்தார்.

இயக்குநர் சுராஜ் கூறிய இக்கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு நடிகை நயன்தாரா ஆவேசமாக ஒரு பதிலை அறிக்கை வாயிலாக வெளியிட்டு, “அதில் நாங்கள் ஒன்றும் விபசாரிகள் இல்லை” என்று கோபமாகக் கூறியிருந்தார்.

இந்நிலையில், நயன்தாராவைத் தொடர்ந்து தற்போது நடிகை தமன்னாவும் சுராஜுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் நடித்த கத்தி சண்டை பட இயக்குநர் சுராஜ் கூறிய கருத்துகளால் வேதனையும், கோபமும் அடைந்துள்ளேன். இதற்காக அவர் என்னிடம் மட்டுமல்ல சினிமாவில் இருக்கும் அனைத்துப் பெண்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். நடிகைகளைக் காட்சிப் பொருட்களாகச் சித்திரிக்கக் கூடாது. நான் கடந்த 11 ஆண்டுகளாக தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து வருகிறேன். எனக்கு வசதியான ஆடைகளைத்தான் அணிந்து வருகிறேன். ஒரு தனி நபர் கூறிய இது போன்று கருத்துக்காக ஒட்டுமொத்த திரைத் துறையையும் பற்றி மக்கள் தவறாக நினைத்துவிடக் கூடாது” என்று தமன்னா கூறியுள்ளார்.

நடிகைகள் குறித்து இயக்குநர் சுராஜ் கூறிய கருத்துகளுக்கு தற்போது பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மேலும் படிக்க