April 1, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சியில் நிலைக்குழு தலைவர்கள், நியமனக்குழு உறுப்பினர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
கோவை மாநகராட்சியில் 5 மண்டல தலைவர்களுக்கான தேர்தல் நேற்று முன் தினம் நடைபெற்றது.நேற்று நிலைக்குழு தலைவர்களை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.
இதில் போட்டியின்றி தேர்வு பெற்றவர்களின் விவரம்:
கல்விக்குழு தலைவர் மாலதி நாகராஜ். இவர் 34வது வார்டு கவுன்சிலர் ஆவார். நகரமைப்பு குழுதலைவர் சோமு என்ற சந்தோஷ். 73வது வார்டு கவுன்சிலர் ஆவார்.கணக்குகள் குழு தலைவர் தீபா.இவர் 59வது வார்டு கவுன்சிலர் ஆவார்.பணிகள் குழு தலைவர் சாந்தி. இவர் 63வது வார்டு கவுன்சிலர் ஆவார்.வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் முபசீரா.82வது வார்டு கவுன்சிலர் ஆவார்.
பொதுசுகாதாரக்குழு தலைவர் மாரிசெல்வன். 80வது வார்டு கவுன்சிலர் ஆவார். நியமனக்குழு உறுப்பினருக்கான தேர்தலில் மு.ராஜேந்திரன் தேர்வு செய்யப்பட்டார். இவர் 91வது வார்டு கவுன்சிலர் ஆவார்.வெற்றி பெற்றவர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா சான்றிதழ் வழங்கினார். மேயர் கல்பனா ஆனந்தகுமார் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.