April 4, 2022 தண்டோரா குழு
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பயிர் நோயியல் துறையில் ஒவ்வொரு மாதமும் 5-ம் தேதி காளான் வளர்ப்பு பயிற்சி நடத்தப்படுகிறது.அதன்படி,நாளை காளான் வளர்ப்பு பயிற்சி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இதில், பங்கேற்க ஆர்வம் உள்ளவர்கள் நேரடியாக பல்கலைக்கழகம் வந்து பயிற்சி கட்டணம் ரூ.590 செலுத்தி பயிற்சிக்கு பதிவு செய்து பயிற்சியில் பங்கேற்கலாம்.
மேலும், பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் பேக்கரி பொருட்கள், சாக்லேட், மிட்டாய்கள் தயாரிப்பு குறித்த இரண்டு நாள் பயிற்சி நாளை,நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் நடக்கிறது.இந்த பயிற்சி சிறு தொழில்முனைவோருக்கு பலன் அளிக்கும். இதில், ரொட்டி வகைகள், கேக் மற்றும் பிஸ்கட், சாக்லேட்,கடலை மிட்டாய், சர்க்கரை மிட்டாய் வகைகள் தயாரிக்க பயிற்சி வழங்கப்படுகிறது.
இதில்,பங்கேற்க ஆர்வமுள்ள தொழில்முனைவோர் ரூ.1,500 கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல், விவரங்களுக்கு 0422-6611268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.