• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் முதல் ஸ்டார்ட் அப் அகாடமி துவக்கம் !

April 5, 2022 தண்டோரா குழு

ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்கபடுத்தும் வகையிலும், புதியதாக தொழில் துவங்கும் ஸ்டார்ட் அப் அமைப்புகளுக்கு வழிகாட்டும் வகையில், கோவையில் முதல் ஸ்டார்ட் அப் அகாடமி துவக்கப்பட்டுள்ளது.

ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்கபடுத்தும் வகையில், அதற்கு தேவையான நுட்பங்களை வழங்கும் வகையில், தன்னார்வ தொண்டு, நிறுவனமாக ஸ்டார்ட் அப் அகாடமி துவங்கப்பட்டுள்ளது,இந்த அகாடமி மூலமாக, புதியதாக தோழில் துவங்க முன்வரும் அமைப்புகளுக்கு தேவையான வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் இவ்வமைப்பு செய்து வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் சேவையை ஊக்குவிக்கும் வகையில் வரும் 30 ம்தேதி *ஸ்டார்ட் அப் துரு* என்ற நிகழ்ச்சியின் வெளிப்பாடாக விருது வழங்க உள்ள நிகழ்வின் துவக்கம், பந்தயசாலை பகுதியில் உள்ள தனியார் உணவக அரங்கில் இன்று நடைபெற்றது, இதனை, பத்ம ஸ்ரீ விருது பெற்ற அருணாசலம் முருகானந்தம் துவக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஸ்டார்ட் அப் அகாடமியின் தலைவர் கார்த்திகேயன் கூறுகையில்,

ஸ்டார்ட் அப் ஈகோ சிஸ்டம் என்பது, இந்தியா மட்டுமின்றி உலகநாடுகள் முழுவதும் செயல்பட்டு வருகிறது, இதன் மூலமாக வேலைவாய்ப்பை உருவாக்குவது மட்டுமின்றி, புதுமை கண்டு பிடிப்புகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது, கோவையில் பல்வேறு ஸ்டார்ட் அப் கள், துவங்க பட்டுள்ளதாகவும், கிட்டத்தட்ட 650 பதிவு செய்யபட்ட ஸ்டார்ட் அப் கள் உள்ளது.

2000 த்திற்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் கள் பதிவு செய்யப்படாமல் இயங்கி வருகிறது, இவர்களின் கண்டுபிடிப்புகள், புதுமைகளை ஊக்கபடுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது தான் ஸ்டார்ட் அப் துரு என்ற நிகழ்ச்சி, இதன் மூலமாக, புதுமை கண்டுபிடிப்புகளை ஊக்கபடுத்தும் வகையில், ஏப்ரல் 30 ம்தேதி, கோவையில் விருதுகள் வழங்கபட உள்ளது அதில், சிறப்பு விருந்தினராக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு, புதிய ஸ்டார்ட் அப் களுக்கு விருதுகளை வழங்க இருப்பதாக தெரிவித்தார்.

இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், தி ஸ்டார்ட் அப்ஸ் அகாடமி ஓஆர்ஜி என்ற இனையதளத்தில் விண்ணப்பங்களை பெற்றுகொள்ளலாம் என்று தெரவித்தார். மேலும் பெண் தொழில் முனைவோர்களுக்கான விருதுகள் வழங்கு தனிப்பிரிவும் உள்ளதாகவும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க