• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஏப்ரல் 6 – 11 வரை நடைபெறும் “கிராப்ட் பஜார் 2022” கண்காட்சி மற்றும் விற்பனை

April 6, 2022 தண்டோரா குழு

இந்தியாவின் கலை மற்றும் கைவினைப் பொருட்களை காட்சிப்படுத்தும் “கிராப்ட் பஜார் 2022”கண்காட்சி மற்றும் விற்பனை கோவையில் இன்று துவங்கியது.

கோயில் நகைகள் மற்றும் வீட்டுப் பொருட்களின் ஆவணங்கள் மற்றும் மாலை அலங்கரிக்கும் கலையின் ஆவணங்கள் வெளியிடுவதற்கான கருவியாக தமிழ்நாட்டின் கைவினைக் கழகம் (சிசிடிஎன்) உள்ளது.

தமிழ்நாடு கைவினைக் கழகம்,சார்பில் கோவை அவினாசி ரோடு சுகுணா கல்யாண மண்டபத்தில் கிராப்ட் பஜார் 2022 கண்காட்சி மற்றும் இன்று துவங்கியது.இக்கண்காட்சியை கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுங்காரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு அமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் கண்காட்சியின் பங்கேற்பாளர்கள் முன்னிலையில் ரிப்பன் வெட்டி துவக்கிவைத்தார்.

இந்த கண்காட்சி வரும் ஏப்ரல் 11 – ம் தேதி வரை ஆறு நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சி மற்றும் விற்பனை தினமும் காலை 10.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடைபெறும்.இந்த ஆண்டு இந்தியா முழுவதிலுமிருந்து இருந்து சுமார் 100 ஸ்டால்கள் வரை இடம்பெறவுள்ளன.

இந்த கிராப்ட் பஜாரில் விற்பனை செய்யப்படவுள்ள பொருட்கள் டை, சாய் மற்றும் பாடிக் புடவைகள், மெட்டீரியல்கள், காந்தா, கை எம்ப்ராய்டரி புடவைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான புடவைகள்,பீட் நகைகள், டஸ்ஸர் பட்டு, இயற்கை இழை தயாரிப்புகள், பட்டு பாய்கள், கையால் செய்யப்பட்ட கூடைகள், ராஜஸ்தானி ஜூட்ஸ், சணல் காலணிகள், தோல் காலணிகள், பஞ்சாபி ஜூட்ஸ், கோலாபூரி காலணிகள், ஸ்படிக, வெட்டு கண்ணாடி, கண்ணாடி பதக்கங்கள், காதணிகள், லாகர்வேர் பொருட்கள், கல் கைவினை பொருட்கள், உலர் மலர்கள், கடல்ஷெல் கைவினைப் பொருட்கள், டோக்ரா உலோக பொருட்கள், கலம்காரி, மதுபாணி, மினியேச்சர் ஓவியம், இயற்கையாக கையில் தயாரிக்கப்பட்ட தோல் பராமரிப்புப் பொருட்கள், குருவாயூர் சுவர் ஓவியங்கள், கையால் வடிவமைப்பு, டர்ரிஸ், தரைவிரிப்புகள், ஜரிகை வேலை, கலை நயமான தோல் பைகள், பழங்குடியின கை எம்பிராய்டரிகள், ஒரிசா பட்டு, பருத்தி, அரக்கு நூல், மணி வளையல்கள் போன்றவை, விலை மதிப்பற்ற அணிகலன்கள், டோக்ரா ஆபரணங்கள், மர, சந்தனமரம் செதுக்குதல், குர்த்திஸ், குர்த்தாஸ், சூட்டுகள், மகேஸ்வரி புடவைகள், பாத், பிச்வாய், கவாட், பட்டஞ்சித்திரா ஓவியங்கள், சாஞ்சி ஓவியங்கள், டெர்ராகோட்டா, கருப்பு மட்பாண்டம், சணல் காலணி, பைகள் முதலியவை இடம்பெற்றுள்ளன.

மேலும் படிக்க