• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டிவிஎச் 25ஆம் ஆண்டு விழா; கோவையில் மேலும் புதிய திட்டங்களை அறிவித்தது

April 6, 2022 தண்டோரா குழு

முன்னணி கட்டுமான நிறுவனமான ட்ரூ வேல்யூ ஹோம்ஸ் (டிவிஎச் ) வரும் மாதங்களில் கோயம்புத்தூரில் தனது புதிய திட்டங்களையும் முன்னிலையையும் அதிகரிக்கும் என்று அறிவித்தது. திருச்சி ரோடு, சத்தி ரோடு, வடவள்ளி, கீரநத்தம் ஐடி பார்க் மற்றும் தொண்டாமுத்தூரில் பண்ணை வில்லா திட்டங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

இது குறித்து ட்ரூ வேல்யூ ஹோம்ஸ் இயக்குநர் கே.என்.மணிவண்ணன் கூறியதாவது,

25 ஆண்டுகளைக் கொண்டாடும் டி வி எச் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தும் என்றும், இந்த வார இறுதியில் நகரில் ஒரு அற்புதமான விழாவை நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார். ஆரம்ப காலத்தில் சென்னையில் ப்ரொஜெக்ட்ஸ் இருந்தபோதும்,2008 ஆம் ஆண்டு முதல், டிவிஎச் ஏகாந்த (300+ யூனிட் திட்டம்) மற்றும் டி வி எச் விஸ்டா ஹைட்ஸ் என்ற பெயரில் 2011 ஆம் ஆண்டு முதல் கோவைக்கு சுவாரஸ்யமான மற்றும் சிறப்பான திட்டங்களை கொண்டு வந்துள்ளது.

இப்போது, டிவிஎச் நிறுவனம் 2 இடங்களில் வீட்டு மனைகளை விற்பனை செய்கிறது . கோவை, கீரணநத்தம் மற்றும் திருச்சி ரோடு மற்றும் பல பட்ஜெட் வீடுகளும் பைப்லைனில் உள்ளன. இனி வரும் களங்களில் கோவை, திருச்சியில் கவனம் செலுத்தப்படும் என்று மணிவண்ணன் தெரிவித்தார்.கீரணநத்தம் உள்ள வீட்டு மனைகள் தூரிகாவின் கீழ் வரும் என்று டிவிஎச் சார்பாக தெரிவிக்கப்பட்டது. கீரணத்தம் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் இருந்து 2 கிமீ தொலைவில் 2.5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.திருச்சி சாலை திட்டம் 5 ஏக்கராக இருக்கும்.

அனைத்து தரப்பு மக்களுக்கும் டி வி எச் சேவை வழங்குவதாகவும், கோவையில் புதிய திட்டங்களை நிறுவனம் அறிவிக்கும் என்றும் டி வி எச் இயக்குனர் கூறினார். மேலும், அவர்களின் 25 ஆண்டுகளைக் கொண்டாடும் விதமாக, டி வி எச் சம்மர் நைட்ஸ் – டி வி எச் விஸ்டா ஹைட்ஸ், கோவையில் ஏப்ரல் 9 மற்றும் 10 ஆகிய இரண்டு நாள் திருவிழாவை நடத்த உள்ளது.குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி மற்றும் செஃப் தாமு,ஸ்டாண்ட் அப் காமெடியன்கள் அசார் மற்றும் டி எஸ் கே மற்றும் சூப்பர் சிங்கர் புகழ் சாம் விஷால் போன்ற பல பிரபலங்கள்-விருந்தினர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

ருசியான உணவை ருசிக்கவும், வேடிக்கை பார்க்கவும், நிறைய ஷாப்பிங் செய்யவும் ஸ்டால்கள் அமைக்க பட உள்ளது.

மேலும் படிக்க