April 7, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் வரும் 11ம் தேதி, மாமன்ற முதல் சாதாரண கூட்டம் நடைபெற உள்ளது.
கோவை மாநகராட்சி தேர்தலில் 100 வார்டுகளில் திமுக கூட்டணி 96 வார்டுகளில் வெற்றி பெற்றது.3 வார்டுகளில் அதிமுகவும், ஒரு இடத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியும் வெற்றி பெற்றது.கோவை மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த கல்பனா ஆணந்தகுமார், துணைமேயராக வெற்றிச்செல்வன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதேபோல், மண்டலத் தலைவர்கள்,நிதிக்குழு உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, புதிய மேயர், துணை மேயர் பொறுப்பேற்ற பிறகு மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில் மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் கூட்டம் நடைபெற்றது.இந்நிலையில், மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் வரும் 11ம் தேதி காலை 10 மணிக்கு மாநகராட்சி பிரதான அலுவலகதத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்டரங்கில் மாமன்ற முதல் சாதாரண கூட்டம் நடைபெற உள்ளது. இந்த தகவலை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.