April 7, 2022 தண்டோரா குழு
சர்வதேச அளவில் பற்பல விருதுகளை வென்றுள்ள கிளவுட் அடிப்படை கட்டமைப்பு தீர்வுகளை வழங்கும் நிறுவனமான குவாட்ரா சிஸ்டம்ஸ் நெட் இந்தியா பிரைவேட் லிமிடெட் (www.quadrasystems.net), முன்னணி மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான பெட்டர் லைவ்ஸ் (www.betterlives.world) (முன்பு ப்ரோப்செவன்) நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது. 2008-ம் ஆண்டில் துவக்கப்பட்ட பெட்டர் லைவ்ஸ் நிறுவனம், இந்தியா, ஐரோப்பியா மற்றும் அமெரிக்க நாடுகளிலுள்ள 200-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு 7 உயர்தர மென்பொருள் தயாரிப்புகளை உருவாக்கி பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளது.
உலக அளவில் உள்ள பல பெறும் நிறுவனங்கள் தங்களது வணிக வளர்ச்சியை விரைவுபடுத்த டிஜிட்டல் முறையில் கிளவுட் அமைப்பிற்கு மாறி வருகின்றனர். இந்த புதிய நிறுவனத்தை கையகப்படுத்துவதன் மூலம் குவாட்ரா நிறுவனம் தனது கிளவுட் அமைப்பின் சேவையை மேலும் விரிவாக்கி இருக்கிறது.
குவாட்ரா சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குநர் நாகராஜ் பொன்னுசாமி கூறுகையில்,
இந்த திட்டமிட்ட விரிவாக்கம் எங்களது வளர்ச்சியை மேலும் வேகப்படுத்துவதோடு, வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனமாக செயல்பட வேண்டும் என்ற எங்களது இலக்கை அடைவதில் மற்றுமொறு மைல்கல் ஆகும்.
இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குநர் பிரசாந்த் சுப்ரமணியம் அவர்கள் பேசுகையில்,
நிறுவனங்களுக்கான நவீன டிஜிட்டல் கட்டமைப்பு முன்பு இருந்ததை விட இப்பொழுது அத்தியாவசியமாகிறது. இந்த முழுமையான டிஜிட்டல் மயமாகும் திட்டத்தை செயல்படுத்த நாங்கள் எங்களது முழு பங்களிப்பை அளிக்கிறோம் என்றார்.
பெட்டர் லைவ்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி முத்துக்குமார் கூறுகையில்,
இத்துறையில் உள்ள பலராலும் வெகுமாக மதிக்கப்படும் குவாட்ரா நிறுவனத்துடன் இணைவதில் நாங்கள் பெருமிதம் அடைகிறோம். இதன்மூலம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மேலும் சிறப்புடன் செயலாற்ற முடியும் என்றார் .
சர்வதேச அளவில் பற்பல விருதுகளை வென்ற கிளவுட் கட்டமைப்பில் மென்பொருள் தீர்வுகளை வழங்கி வரும் குவாட்ரா நிறுவனம் இந்தியாவில் பல முன்னணி நிறுவனங்களுக்கு தொழில் நுட்ப சேவையை வழங்கி அவர்களின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றி வருகிறது. இந்நிறுவனத்தின் 750-க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் பெற்ற அனுபவமிக்க குழு 3000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மென்பொருள் சேவையை அளித்து வருகிறது.