• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உதயசூரியன் சின்னத்தை கொலுசு சின்னமாக மாற்றி கொள்ளலாம்- சிபி.ராதாகிருஷ்ணன்.

April 9, 2022 தண்டோரா குழு

தமிழக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று பாஜக சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் காந்தி பார்க் பகுதியில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னாள் எம்பி சிபி.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டு கண்டன பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.”சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும்,சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்” ஆகிய பதாதைகளை ஏந்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய சிபி ராதாகிருஷ்ணன்,

சொல்வதை செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்து விட்டு சொல்லாததை எல்லாம் செய்பவர்கள்தான் திமுகவினர் என தெரிவித்தார். சொத்தையே விற்று கட்டுவது போல் சொத்து வரியை உயர்த்தி உள்ளதாகத் தெரிவித்தார்.அதிமுகவினர் மத்திய அரசிடமிருந்து தேவையானவற்றை பெரும்பொழுது அடிமை அரசு என கூறிய இவர்கள் தற்போது அனைத்திற்கும் டெல்லியை பார்த்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். கையாளாகாத அரசு ஆட்சி பொறுப்பில் உள்ளதாகவும் கூறினார்.

காமராஜருக்கு சுவிட்ஸ் வங்கியில் கணக்கு உள்ளதாக கூறி வந்தவர்கள் தான் திமுகவினர் எனவும் தெரிவித்தார்.திமுக பெற்றுள்ள கடைசி வெற்றி இந்த வெற்றிதான் என்றும் திமுக கட்சியின் பெயரை கொலுசு பார்ட்டி என்றும் அவர்களது உதயசூரியன் சின்னத்தை கொலுசு சின்னமாக மாற்றி வைத்துக் கொள்ளலாம் எனவும் கூறினார்.திமுக அரசு மத்திய அரசுதான் சொத்து வரியை உயர்த்தியதற்கு காரணம் எனறு கூறினால் அதற்கான ஆவணங்களை காண்பிக்குமாறு தெரிவித்தார்.

திமுகவினருக்கு பக்கவாத்தியங்கள் என்ற நம்பிக்கை தான் அதிகம் என பாலகிருஷ்ணன், திருமாவளவன்,வைக்கோ ஆகியவர்களை சுட்டிக்காட்டினார்.பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், தேர்தல் வாக்குறுதிகள் சொல்லாமலேயே பெட்ரோல் டீசல் விலையை குறைத்தது மத்திய அரசு தான் என்றும் ஆனால் திமுக அரசு கூறியதை சரிவர செய்யவில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும் வேதனையோடு பெட்ரோல் விலையை உயர்த்துகின்ற சூழ்நிலையில் மத்திய அரசு உள்ளதாகவும் தெரிவித்தார். ரஷ்யாவிலிருந்து குருடாயில் இந்தியாவிற்கு வரும் பொழுது பெட்ரோல் விலை குறையும் எனவும் தெரிவித்தார்.சூழலின் காரணத்தால் உயர்ந்து கொண்டே வருகின்ற சூழலை இனி குறைந்து கொண்டே வரும் சூழலை உருவாக்குவோம் எனவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க