• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முதல்வரை நேரில் சந்தித்து கோவை தொழில் அமைப்பினர் மனு

April 9, 2022 தண்டோரா குழு

சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் கோவை தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். பின்னர் தொழில் அமைப்புகளின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

இதில் குறுந்தொழில்களின்‌ வளர்ச்சிக்காக டாக்ட் சங்கம் சார்பில் கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

தொழில்‌ நகரமான கோவையில்‌ தமிழக அரசு சார்பில்‌ ஜாப்‌ஆடர்கள்‌ மற்றும்‌ உதிரிப்பாகங்கள்‌ செய்து வரும்‌ தொழில்‌ முனைவோர்களுக்காக கோவை நகர் பகுதியிலிருந்து 15 கிலோ மீட்டர் சுற்றளவில்‌ குறுந்தொழில் பேட்டை அமைத்து தரவேண்டும். அதில் அடுக்கு மாடி கட்டிடங்கள் அமைத்து தர வேண்டும். அதற்கு வங்கி கடன்கள் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியாவில்‌ எங்கும்‌ இல்லாத அளவுக்கு நமது தமிழகத்தில்‌ ஜாப்‌ஆடர்கள்‌ செய்து கொடுக்கும்‌ தொழில்‌ முனைவோர்கள்‌ லட்சக்கணக்கில்‌ உள்ளனர்.‌ இவர்கள்‌ கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்றாலும்‌, மூலப்பொருள்‌ விலை ஏற்றத்தாலும்‌ ஜாப்‌ஆடர்கள்‌ கிடைக்க பெறமுடியாமல்‌ முடங்கிக் கிடக்கிறார்கள்‌. ஒன்றிய அரசு அளித்த கடன்‌ திட்டம்‌ கூட இவர்களுக்கு உதவிடவில்லை. கடந்த ஆட்சியாளர்களும்‌ உதவிட முன்‌ வரவில்லை. தங்கள்‌ அரசு கனிவுடன்‌ எங்கள்‌ கோரிக்கையை பரிசீலித்து அரசுக்கு சொந்தமான தாய்கோ வங்கியின்‌ மூலமாகவும்‌, கூட்டுறவு வங்கிகள்‌ மூலமாகவும்‌ நடப்பு மூலதன கடனாக குறைந்த பட்சம்‌ குறைந்த வட்டியில்‌ 2 லட்சம்‌ வரை வழங்கிட வேண்டும்.

ஜாப்‌ஆடர்கள்‌ மற்றும்‌ உதிரி பாகங்கள்‌ செய்து வரும்‌ தொழில் முனைவோர்களும்‌, பொதுத் துறை நிறுவனங்களும்‌, தனியார் துறை நிறுவனங்களும்‌ நாங்கள்‌ செய்து கொடுக்கும்‌ வேலைகளுக்கு 90 நாட்கள்‌ முதல்‌ 180 நாட்கள்‌ வரை பில்கான தொகை தருவதற்கு கால அவகாசம்‌ எடுத்து கொள்கின்றனர். இதனால் குறித்த தேதிகளில்‌ குறு சிறு தொழில்‌ முனைவோர்கள்‌ ஜி.எஸ்.டி. கட்ட முடியாமல்‌ காலம்‌ தாழ்த்தி செலுத்தும்‌ நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.

அதற்காக கால தாமதத்துக்கான கட்டணம்‌ செலுத்தியும்‌, தற்போது அபராத வட்டி தனியாக செலுத்திட அதிகாரிகள்‌ வற்புறுத்தி வருகின்றனர். தமிழக அரசு ஜி.எஸ்.டி கவுன்சில்‌ மூலமாக அபராத வட்டிகளை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுத்து குறு சிறு தொழில்களை பாதுகாத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இச்சந்திப்பில் கொடிசியா தலைவர் ரமேஷ்பாபு, சீமா தலைவர் கார்த்திக், டான்சியா துணை தலைவர் சுருளிவேல், கொடிசியா முன்னாள் தலைவர்கள் சுந்தரம், ராமமூர்த்தி, காட்மா தலைவர் சிவக்குமார், லகுஉத்யோக்பாரதி தலைவர் சிவக்குமார் மற்றும் முதல்வருடன் அமைச்சர் பெருமக்கள் செந்தில்பாலாஜி, தங்கம்தென்னரசு, தாமோதரன் ஆகியோர்களும் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க