April 11, 2022 தண்டோரா குழு
கோவையில் கொரோனா வைரஸ் பரவல் மிகவும் குறைந்துள்ள போதிலும் மாநகராட்சி பகுதிகளில் சளிம் காய்ச்சல் கண்டறியும் பணி தொடர்ந்து நடைபெறும் என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. இதன் காரணமாக தினமும் 2 அல்லது 5 வரையில் மட்டுமே தற்போது கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். எனினும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் வீடு, வீடாக சென்று சளி, காய்ச்சல் உள்ளதா? போன்ற கொரோனா தொற்றை கண்டறியும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து சுகாதாரத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ கோவை மாநகராட்சி பகுதிகளில் வீடு, வீடாக சென்று கொரோனா அறிகுறி உள்ளதா? என ஆய்வும் செய்யும் பணி தொடர்ந்து நடைபெறும்,’’ என்றார்.