April 12, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் 18 மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன வசதிகளுடன் கூடிய இருசக்கர வாகனங்களும் 6 பேருக்கு செல்போன்களும் வழங்கப்பட்டன. இதனை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.எஸ்.சமீரன் வழங்கினார்.
முன்னதாக மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் இருசக்கர வாகனங்களின் வசதிகள் குறித்தும் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.பின்னர் வாகனங்களை பெற்ற மாற்று திறனாளிகளிடம் இதனை இயக்க சுலபமாக உள்ளதா என கேட்டறிந்தார்.சிலர் தங்களுக்கு லைசன்ஸ் பெற்று தர உதவுமாறு கோரிக்கை விடுத்தனர் உடனடியாக அதனை நிறைவேற்றும் படி உத்தரவிட்டார்.மேலும் மாற்று திறனாளிகளிடம் தேவைகளை கேட்டு அறிந்தார்.
இந்நிகழ்வில் சுமார் 50 வயதான மாற்றுத் திறனாளி ஒருவருக்கு இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. அவர் இருசக்கர வாகனத்தில் ஏறுவதற்கு சிரமப்பட்ட போது மாவட்ட ஆட்சியர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் செய்தி தொடர்பு துறை அலுவலர் செந்தில் அண்ணா,மாவட்ட ஆட்சியரின் உதவியாளர் தனபால்,ஆகிய உதவி புரிந்தனர்.அவர்களுக்கு அந்த மாற்றுத்திறனாளி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.இந்நிகழ்வு அங்கிருந்த அனைவரையும் நெகிழச் செய்தது.