April 12, 2022 தண்டோரா குழு
கோவை காந்திரம் நேரு விளையாட்டு அரங்கு அருகில் உள்ள மாநகராட்சி வ.உ.சி. உயிரியல் பூங்காவில் ஊர்வன, பறப்பன, பாலூட்டிகள் என 40 இனங்களில் 400 விலங்கினங்கள் வரை உயிரியல் பூங்காவில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்களின் பொழுது போக்கு பூங்காவாக வ.உ.சி பூங்கா இருந்தது. இந்நிலையில் கோவை வஉசி உயிரியல் பூங்காவுக்கான அங்கீகாரத்தை ஒன்றிய உயிரியல் பூங்கா ஆணையம் சமீபத்தில் ரத்து செய்தது. இதனால் பூங்கா மூடப்பட்டுள்ளது. இதனால் கோவை மக்கள் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.
இந்நிலையில் கோவையில் புதிய அம்சங்களுடன் கூடிய புதிய உயிரியல் பூங்கா ஒன்று கட்டமைக்கப்படவுள்ளது. கோவை நஞ்சப்பா சாலையில் சிறை மைதானம் பகுதியில் மாநகராட்சி இடத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் இந்த நவீன உயிரியல் பூங்கா அமையவுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,
‘‘இந்த புதிய உயிரியல் பூங்கா கட்டமைப்பு தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி விரைவில் முடிவடையும். அதன் பின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்,’’என்றார்.