April 13, 2022
தண்டோரா குழு
கோவையில் நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியானதையடுத்து ரசிகர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள நடிகர் விஜய் நடித்த இந்த படத்தில் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.இந்நிலையில் இன்று நாடு முழுவதும் திரையரங்கில் பீஸ்ட் திரைப்படம் வெளியானது.
கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள கேஜி திரையரங்கு முன்பு விஜய் மக்கள் இயக்கத்தின் கோவை மாவட்ட மாணவரணி தலைவர் பாபு தலைமையில் நள்ளிரவு முதல் குவிந்த விஜய் ரசிகர்களின் பட்டாளமே சிறிய பேனர் வைத்து, மாலைகள் இட்டு,பட்டாசு வெடித்து, கேக் வெட்டி ஆரவாரமாக கொண்டாடினர்.
இந்த உற்சாக கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள் ஏராளமானோர் பங்கேற்று திரைப்படத்தை வரவேற்றனர்.தொடர்ந்து காலை 4 மணி அளவில் குழந்தைகள், குடும்பத்தினர், இளைஞர்கள் என திரண்டு படம் பார்க்க வந்திருந்தனர்.