April 13, 2022 தண்டோரா குழு
கோவை சூலூர் அரசூரில் உள்ள ஸ்ரீ விவேகானந்த பப்ளிக் பள்ளியில் 6ம் வகுப்பு மாணவன் ஷஷான்ங்க் அபிலாஷ். இவர் அட்வென்ச்சர் அகாடமி ஆஃப் மார்ஷல் ஆர்ட்ஸ் கராத்தே அகாடமியில் கடந்த 2018 முதல் பயிற்சி பெற்று வருகிறார்.பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம்,வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார்.
இவர் 2019ம் ஆண்டில் நடைபெற்ற மாநில, மாவட்ட அளவிலான கராத்தே போட்டிகளில் சப் ஜூனியர் கட்டா பிரிவில் தங்கப்பதக்கம் வென்று அதன் மூலம் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழ்நாடு சார்பில் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் வென்றார். மேலும் இவர் கட்டா, டீம் கட்டா,குமித்தே போன்ற பிரிவுகளில் ஒலிம்பிக்கில் தடம் பதிப்பதே தன் இலக்காக கொண்டு பயிற்சி பெற்று வருகிறார். இவரின் தொடர் சாதனைகளை பாராட்டி அகாடமியின் மூலம் சிறந்த மாணவருக்கான விருது வழங்கப்பட்டது.
இதனை கோயம்புத்தூர் முதன்மை கல்வி அலுவலர் கீதா வழங்கி பாராட்டினார். மேலும், இவரின் சாதனைகளுக்கு உறுதுணையாக இருக்கும் பள்ளி நிறுவனர் பத்மினி ராமமூர்த்தி, பள்ளி முதல்வர் மாலதி கோபிநாத், தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்க தலைவர் சென்சாய் எஸ்.சாய்புரூஸ்,தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் காராத்தே சங்க ஆர்.சி தலைவர் சென்சாய் அறிவழகன் மற்றும் பயிற்சியாளர் நாசர்தீன் ஆகியோர் பாராட்டுக்களையும், சாதனைகள் படைக்க வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.