December 27, 2016 தண்டோரா குழு
கோவா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 27) விபத்துக்குள்ளாகி 15 காயமடைந்தனர்.
கோவா டாபோளின் விமான நிலையத்திற்கு வந்த 9W 2374 என்னும் ஜெட் ஏர்வேஸ் விமானம் அங்கிருந்து மும்பைக்கு புறப்பட்டது. 7 விமான ஊழியர்கள் உட்பட 154 அதில் பயணம் செய்தனர். புறப்பட்ட சில நிமிடங்களில் அந்த விமானத்தின் சக்கரம் கழன்று நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்தனர்.
இதை அறிந்த மீட்புப் படையினர் விரைந்து வந்து விமானத்தில் இருந்தவர்களைப் பத்திரமாக மீட்டனர். காயம் அடைந்த 15 பேரை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து கோவா விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், “அந்த விமானத்தின் சக்கரம் கழன்று ஓடும் பாதையில் இருந்து விலகியதால் விமானத்தின் பயணித்தவர்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். திங்கள்கிழமை மதியம் 12.3௦ மணிவரை விமான நிலையம் மூடப்பட்டது. இந்த விபத்து குறித்து விசாரணை செய்ய மத்திய விமானப்படை ஆணையகம் உத்தரவிட்டுள்ளது” என்றார்.
மற்றொரு பயணி செய்தியாளர்களிடம் பேசுகையில், “நாங்கள் விமானத்தில் இருந்து கீழே இறங்கும்போது விமானம் ஒரு புறம் சாய்ந்தது, இதனால் பீதி அடைந்த மக்கள் வேகமான இறங்கியதால் சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது” என்றார்.