April 15, 2022 தண்டோரா குழு
பருத்தி மீதான 11 சதவிகித இறக்குமதி வரி நீக்கத்திற்கு,தென்னிந்திய பஞ்சாலைகள் வரவேற்ப்பு அளிப்பதாக தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க தலைவர் ரவி ஷாம் பந்தயசாலையில் இன்று தெரவித்துள்ளார்.
கோவை பந்தய சாலை பகுதியில்,உள்ள தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் தலைவர், ரவிஷாம்,மற்றும்இந்திய தொழில் கூட்டமைப்பின் சிட்டி தலைவர் ராஜ் குமார் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
அப்பொழுது அவர்கள் கூறுகையில்,
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர், உங்களை எல்லாம் சந்தித்து பேசிய பொழுது, பருத்தி இறக்குமதி மீதான வரியை ரத்து செய்ய கொரி கொரிக்கை விடுத்து இருந்தோம், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி மூலமாக இந்த தகவல் அன்வருக்கும் புரியும் படியாக எடுத்து சென்றதற்கு நன்றிகளை தெரவித்து கொள்வதாக தெரவித்தார். அதன் அடிப்படையில் மத்திய அரசு இரண்டு தினங்களுக்கு முன்பு, இந்த வரியை நீக்கி விட்டனர்.
இதில் விவசாயிகளுக்கும் பாதகம் ஏற்படுத்தாமல்,தொழிலும் பயணடையும் வகையில்,ஏப்ரல், மாதம் துவங்கி செப்டம்பர் 30 ம் தேதி வரை நீக்கியுள்ளனர்,இதன் பயனாக, நூற்பாலைகள் பின்னலாடைகள், விசைத்தறி, கைத்தறி நெசவாளர்கள் பயண்பெறுவாருகள், ஏற்கனவே நான் குறிப்பிட்டதை போல இந்த ஆண்டு, பருத்தி உற்பத்தி 340 லட்சம் பேல் என்று நிர்ணயம் செய்து இருந்தாலும் நாங்கள் எதிர்பார்ப்பது, 325 முதல் 330 லட்சம் தான் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
இது கடந்த ஆண்டை விட 45 லட்சம் பேல், குறைவாவ வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது என்றும்,இந்த வரி நீக்கம் உத்தரவு வந்த பின்னர்,பேலுக்கு 1000 ருபாய் விலை குறைந்துள்ளது.மேலும் குறைய வாய்ப்பு உள்ளது, எனேற்றால்,பதுக்கி வைக்கப்பட்டுள்ள பருத்திகள் அனைத்தும் வெளி வரும், இந்த இறக்குமதி வரியை ரத்து செய்துளள்தால் அனைத்து நூற்பாலைகளும் பஞ்சை இறக்குமதி செய்ய முன்வருகிறார்கள்.
வெளிநாடுகளில் உள்ள பருத்தி இறக்குமதி செய்ய ஆயத்தமாகி வருகின்றனர், சுமார் 30 முதல் 35 லட்சம் பேல்கள் செப்டம்பர் மாதத்திற்குள் இறக்குமதி ஆகும் என்று எதிர்பார்க்க படுகின்றது,எனவே இந்த வரியை நீக்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ் கோயல், அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்வதாக தெரிவித்தார்.