• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஒப்போ எஃப் 21 மொபைல் வரிசையில் மிக மெலிதான ஸ்மார்ட் போன் அறிமுகம்

April 15, 2022 தண்டோரா குழு

ஒப்போ என்கோ ஏர் 2 ப்ரோ டிடபிள்யூஎஸ் இயர்பட்களுடன் அதன் எஃப் 21 ப்ரோ மற்றும் எஃப் 21 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏப்ரல் 15-ம் தேதி முதல் கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஒப்போ எஃப் 21 ப்ரோ 5ஜி மற்றும் ஒப்போ என்கோ ஏர் 2 ப்ரோ ஏப்ரல் 21 முதல் ஆன்லைன் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலமாக விற்பனைக்கு வரும். தொழில்முறை போர்ட்ரெய்ட் புகைப்படம் எடுப்பதில் அளவற்ற வசதிகளை வழங்குகிறது.

எஃப் 21 ப்ரோ மற்றும் எஃப் 21 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் செல்ஃபி படப்பிடிப்பில் ஒரு புதிய அளவுகோலை அமைத்துள்ளது. எஃப்21 ப்ரோவின் 32 எம்பி செல்ஃபி கேமரா-சோனியின் ஐஎம்எக்ஸ் 709 ஆர்ஜிபிடபிள்யூ (சிவப்பு, நீலம், பச்சை, வெள்ளை) செல்ஃபி சென்சாருடன் உள்ளது. இது 60 சதவீத அதிக உணர்திறன் கொண்டது, பயன்படுத்துபவர்கள் துல்லியமான, தெளிவான மற்றும் நன்கு வெளிப்படும் புகைப்படங்களைப் பெற இந்த வசதி அனுமதிக்கிறது.

ஒப்போ, 15ஒ ஃ 30ஒ உருப்பெருக்கத்திற்கான முறையுடன் ஒப்போ எஃப்21 ப்ரோ-வில் இந்த பிரிவிலேயே முதல் முறையாக 2 எம்பி மைக்ரோ லென்ஸ்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயனர்கள் நுண்ணிய வகையில் அமைப்பு, வண்ணங்கள், வடிவங்கள் மற்றும் அளவுகளை ஆராய்ந்து படம் எடுக்க உதவுகிறது. அதன் செயற்கை நுண்ணறிவு போர்ட்ரெய்ட் மேம்பாட்டு அம்சமானது கூர்மையான உருவப்படங்களை உருவாக்க சம்பந்தப்பட்டவற்றின் நிறம் மற்றும் ஸ்கின் டோனை சரிசெய்கிறது.

எஃப்21 ப்ரோ 5ஜி, மறுபுறம், 16 எம்பி முன்பக்க கேமரா, 64எம்பி பிரதான கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ டிரிபிள் கேமரா யூனிட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பறவைகள், கட்டிடக்கலை மற்றும் உணவு போன்ற 23-க்கும் மேற்பட்ட காட்சி அம்சங்களில் வண்ணச் செறிவு மற்றும் மாறுபாட்டை மேம்படுத்தும் செயற்கை நுண்ணறிவுக் காட்சி மேம்படுத்தல் அம்சத்துடன் இது வருகிறது. மேலும், இதன் டூயல் வியூ வீடியோ அம்சம், வீடியோவை பதிவு செய்ய முன் மற்றும் பின்பக்க கேமராக்களை ஒரே நேரத்தில் பயன்படுத்த அனுமதிக்கிறது.

எஃப்21 ப்ரோ மற்றும் எஃப்21 ப்ரோ 5ஜி-யில் கிடைக்கும் செல்ஃபி ஹெச்டிஆர் அம்சம்-பின்னணி ஒளியைக் கண்டறிந்து அதற்கேற்றவாறு செயல்படுகிறது. மங்கலான வெளிச்சம் அல்லது பின்னொளி சூழலில் கூர்மையான, பிரகாசமான மற்றும் இயற்கையாகத் தோற்றமளிக்கும் செல்ஃபிகளை எடுக்க தானாகவே சரிசெய்து கொள்கிறது. இரண்டு சாதனங்களும் பொக்கே ஃப்ளேர் போர்ட்ரெய்ட் அம்சத்துடன் வருகின்றன. இது பின்னணியை மங்கலாக்குகிறது. பொக்கே லைட் புள்ளிகளை அதிகரிப்பதுடன் தொழில்முறை தோற்றமுடைய உருவப்படங்களை எடுப்பதற்காக சம்பந்தப்பட்ட பொருளின் பிரகாசத்தை அதிகரிக்கிறது.

எஃப் 21 சீரிஸ் பற்றி ஒப்போ இந்தியா நிறுவனத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி தமியாந்த் சிங் கானோரியா கூறுகையில்,

“ஒப்போ எஃப் தொடர் மொபைல் போன்கள் அதன் ஒப்பிடமுடியாத செயல்திறன் ஸ்டைலான, மற்றும் நேர்த்தியான வடிவமைப்பைக் கொண்டுள்ளன. புதிய எஃப் 21 சீரிஸ் மூலம், எஃப் சீரிஸ் வழங்கும் உயர் மதிப்புகளைத் தக்க வைத்துக் கொண்டு, தொழில்முறை போர்ட்ரெய்ட் புகைப்படம் எடுப்பதில் புதிய அளவுகோலை அமைத்துள்ளோம். மிகவும் மெலிதான, கண்ணைக் கவரும் ஸ்மார்ட்ஃபோனை வாங்கி, உங்களுக்குப் பிடித்த நினைவுகளை உருவப்படங்களைத் தெளிவாகப் படம்பிடிக்கலாம்.” என்றார். இந்த தொழில்துறையில் முதல் கண்ணாடியிழை தோல் வடிவமைப்பை ஒப்போ க்ளோ கொண்டுள்ளது.

எஃப் 21 ப்ரோ இரண்டு வண்ண விருப்பங்களில் வருகிறது: சன்செட் ஆரஞ்சு மற்றும் காஸ்மிக் பிளாக் ஆகியவை அவை. சன்செட் ஆரஞ்சு மாடலில் ஒப்போ-வில் இந்த பிரிவில் முதல் முறையாக ஃபைபர் கிளாஸ்-லெதர் டிசைன் பொருத்தப்பட்டுள்ளது. இது போனை மெல்லியதாகவும், இலகுவாகவும், நீடித்த நிலைத் தன்மை கொண்டதாகவும் மாற்றும் வகையில் ‘ஃப்ரேம்லெஸ்’ பேட்டரி கவருடன் இரட்டிப்பு சிறப்புத் தன்மை கொண்டதாக உள்ளது. ஃபைபர் கிளாஸ்-லெதர் டிசைனில் லிச்சி டெக்ஸ்ச்சர் கோட்டிங் மற்றும் மோல்டட் ப்ளேட் கவர் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது உன்னதமாக தோற்றம் மற்றும் உணர்விற்காக ஃபோனின் பின் கவரை மிட்-ஃபிரேமுடன் தடையின்றி ஒருங்கிணைக்கிறது.

எஃப்21 ப்ரோ ஆனது ஆர்பிட் லைட் அம்சத்துடன் வருகிறது. இது மைக்ரோலென்ஸை சுற்றி அமைந்து, மெசேஜ்கள், அழைப்புகள் மற்றும் சாதனத்தின் பேட்டரியின் சார்ஜிங் நிலையைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க மென்மையான ஒளியை வெளியிடுகிறது. எஃப்21 ப்ரோ வெறும் 7.54 மில்லி மீட்டர் மெல்லியதாகவும் 175 கிராம் எடையுடனும் உள்ளது. கூடுதல் ஆயுளுக்காக ஃபோன் 2.5டி கார்னிங் கிளாஸ் முன் பக்கத்தில் உள்ளது.

எஃப்21 ப்ரோ 5ஜி, இரண்டு வண்ணங்களில் வருகிறது: ரெயின்போ ஸ்பெக்ட்ரம் மற்றும் காஸ்மிக் பிளாக் ஆகியவை அவை. ரெயின்போ ஸ்பெக்ட்ரம் மாடல் போனில் மூன்று-அடுக்கு அமைப்பு மற்றும் இரண்டு-அடுக்கு பூச்சு செயல்முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒன்றாக இணைந்த அடுக்குகள் ஒரு மாறுபட்ட மற்றும் பிரிஸ்மாடிக் விளைவை உருவாக்குகின்றன. இது சிவப்பு முதல் மிண்ட் பச்சை, மஞ்சள் முதல் ஊதா மற்றும் பச்சை முதல் இளஞ்சிவப்பு நிறங்களைப் பிரதிபலிக்கிறது.

காஸ்மிக் பிளாக் மாடல், கைரேகை மற்றும் கறை-எதிர்ப்பு போன்றவை கைளில் ஜொலிக்கும் உணர்வைக் கொடுக்கும். அதே வேளையில் பின்புறம் பளபளப்பாகத் தோற்றமளிக்கும் ஒப்போ க்ளோ வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

எஃப்21 ப்ரோ 5ஜி ஆனது ஒப்போ-வின் டூயல்-ரிங் ஃப்ளோட்டிங் நோட்டிஃபிகேஷன் லைட் மூலம் அதன் அழகியல் கவர்ச்சியை அதிகரிக்கிறது. அதன் பின்பக்கக் கேமராக்களைச் சுற்றி ஃபோன் இயக்கப்படும்போது, ரீசார்ஜ் செய்யும் போது அல்லது ஏதேனும் அறிவிப்பைப் பெறும்போது அது துடிப்பை வெளிப்படுத்துகிறது..

எஃப்21 ப்ரோ 5ஜி மெலிதான 5ஜி சாதனமான எஃப் தொடர் வரிசை தயாரிப்பில் வந்துள்ளது. இது 7.55 மிமீ அளவில் மெல்லியதாகவும் 173 கிராம் எடையுடனும் உள்ளது. இரண்டு கைபேசிகளும் 6.4 இன்ச் அமோல்டு டிஸ்ப்ளேவுடன் வருகின்றன.

மேலும் படிக்க