• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கந்துவட்டி கும்பலிடம் இருந்து பாதுகாப்பு கோரி கோவை வியாபாரி ஆட்சியரிடம் மனு

April 18, 2022 தண்டோரா குழு

கோவையில் ஜெட் வட்டி,மீட்டர் வட்டி என மிரட்டி வசூல் செய்யும் கந்துவட்டி கும்பலிடம் இருந்து பாதுகாப்பு கோரி கோவையை சேர்ந்த மொத்தவிலை வியாபாரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

கோவை ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் ஆஷிக்.காந்திபுரம் பகுதியில் மொத்தமாக செல்போன் விற்பனை செய்து வரும் இவர்,மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்ப்பு முகாமில் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள மனுவில்,கடந்த 2019 ஆம் ஆண்டு முதல், பிரகாஷ் என்பருடன் சேர்ந்து பங்குதாரராக இருந்து செல்போன் கடை நடத்தி வந்ததாகவும் ,இந்நிலையில். காந்திபுரம் கிராஸ்கட் ரோடு பகுதியை சேர்ந்த பூபதி ராஜா என்பவரிடம் இருந்து என்னுடைய பங்குதாரர் பிரகாஷ் வட்டிக்கு கடன் பெற்று தருவார்.

நாங்கள் எடுத்த ஸ்டாக் விற்பனை ஆக ஆக அவருக்கு அசலை வட்டியுடன் திரும்ப கொடுத்து வந்தோம். இப்படி தான் எங்கள் நிறுவனத்திற்கும் பூபதிராஜாவுக்குமான கொடுக்கல், வாங்கல் இருந்துவந்தது. இந்நிலையில், சில மாதங்களுக்கு பிறகு அவர் தந்த பணத்திற்கு வட்டிக்கு மேல் வட்டி போட்டு பணம் தர வேண்டும் என எங்களை வற்புறுத்தி வந்தார். நாங்களும் அவராகவே நிர்ணயித்த வட்டியுடன் அசலையும் சேர்ந்தது தந்து வந்தோம்.

இந்நிலையில், கடந்த வருடம் 2021 ஜனவரியில் நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை பார்த்த போது, பூபதிராஜா விடம் வட்டிக்கு வாங்கிய பணத்தின் மூலம் நிறுவனத்திற்கு ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டதையும்,அறிந்து,எனக்கும்.
பிரகாஷிற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், பிரகாஷ் நிறுவனத்தை விட்டு விலகிய பிறகு நிறுவனத்தின் முழு அதிகார பொறுப்பையும் நான் ஏற்று கொண்டதால்,பிரகாஷ் முபாரக் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக வட்டிக்கு பணம் வாங்கி இருந்தால் அதற்கு நான் பொறுப்பு இல்லை என பூபதிராஜாவிடன் அப்போதே தெளிவாக சொல்லிவிட்டேன். அதற்கு அவரும் சம்மதித்தார்.

பூபதிராஜாவிடம் நிறுவனத்திற்காக வட்டிக்கு வாங்கிய பணத்தை கடந்த வருடம் அவர் நிர்ணயித்த வட்டி விகிதத்தில் திரும்ப கொடுத்துவிட்டேன்.இதில்,வட்டி மட்டுமே 2 கோடியே 46 இலட்சம் ரூபாய் கொடுத்துள்ள நிலையில் பூபதிராஜா “நீ இதுவரை தந்த பணம் பத்தாது 75 லட்சம் கூடுதலாக வட்டி தர வேண்டும். அதை தர மறுத்தால் மார்க்கெட்டில் தொழில் செய்ய விடமாட்டேன். உன் அலுவலகம் வந்து செல்போன்களை எடுத்து வந்துவிடுவேன். உன் வீட்டிற்கு வந்து குடும்பத்துடன் கொளுத்தி விடுவேன். ” என தொடர்ந்து மிரட்டி வருகிறார்.

நான் பூபதி ராஜாவிடம் வாங்கிய பணம், திரும்ப தந்த பணத்திற்கு உண்டான விவரங்கள், வங்கி பரிவர்த்தனை தொடர்பான எல்லா ஆவணங்களும் என்னிடம் உள்ளது. அதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். வாங்கிய பணத்திற்கு கந்துவட்டி கேட்டார்கள் கொடுத்துவிட்டேன் இப்போது மீட்டர் வட்டி, ஜெட் வட்டி கேட்கிறார்கள். இந்த சூழ்நிலையில் வட்டிக்கு பல மடங்கு வட்டி போட்டு பணம் கேட்டு என்னை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கந்துவட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுத்து என் உயிருக்கும், என் குடும்பத்தினர்கள் உயிருக்கும், என் வியாபார நிறுவனத்திற்கும் தகுந்த பாதுகாப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த புகார் மனுவில் ஆஷிக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க