• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நடிகர் மாதவன், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பலர் மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவு

April 18, 2022 தண்டோரா குழு

சத்குரு தொடங்கியுள்ள மண் காப்போம் இயக்கத்திற்கு சினிமா,விளையாட்டு, இசை என பல்வேறு துறை பிரபலங்களிடம் இருந்து ஆதரவு பெருகி வருகிறது.

அதன்படி, இந்திய திரை துறையில் இருந்து பிரபல நடிகர்கள் மாதவன், அஜய் தேவ்கான், பிரேம் சோப்ரா, தமன்னா, மவுனி ராய், ஜூஹி சாவ்லா,சில்பா செட்டி, மனிஷா கொய்ராலா, கிரிக்கெட் துறையில் இருந்து ஹர்பஜன் சிங், ஏ.பி.டெவிலியர்ஸ், மேத்திவ் ஹைடன், விவியன் ரிச்சர்ட்ஸ், இசை துறையில் இருந்து பாடகர்கள் சோனு நிகம், ஸ்ரேயா கோசல், தில்ஜித் தோஷந்த், மலுமா உள்ளிட்ட பலர் மண் காப்போம் இயக்கத்திற்கு தங்களுடைய மனமார்ந்த ஆதரவை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக, நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில்,

“உலக பொருளாதார கூட்டமைப்பின் தகவலின்படி, உலக மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் ஏதோ ஒரு விதமான ஊட்டச்சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதாரத்தில் சற்று நல்ல நிலையில் இருக்கும் மக்கள் கூட ஊட்டச்சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

உங்களுடைய வயிறு நிரம்பியுள்ளதால், அதை நீங்கள் உணரவில்லை. ஆனால், உங்களுடைய உடல் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் பாதிப்புக்கு உள்ளாகிறது. நமது மண்ணே அழிந்து வருவதால், நாம் உண்ணும் உணவில் அத்தியாவசியமான சத்துக்கள் இல்லாமல் போகிறது. மண்ணை வளமாக வைத்து கொள்ளாவிட்டால், நாமும், நமக்கு அடுத்து வரும் சந்ததியினரும் ஆரோக்கியமாக இருக்க முடியாது.

எனவே, இது மண்ணை காப்பதற்கான நேரம். மண் வளத்தை பாதுகாத்து, ஆரோக்கியமான, நிலையான பூமியை உருவாக்கும் இம்முயற்சியில் என்னுடன் இணையுங்கள்” என தெரிவித்துள்ளார்.

சத்குருவுடன் கலந்துரையாடிய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், “மண் காப்போம் இயக்கத்திற்காக பல்வேறு நாடுகளுக்கு சத்குரு பைக்கில் பயணித்து வருகிறார். இந்த மாபெரும் திட்டத்தை கையில் எடுத்துள்ள அவருக்கு எனது பாராட்டுக்கள். வாருங்கள், நாம் அனைவரும் இவ்வியக்கத்தில் பங்கெடுப்போம்” என தெரிவித்துள்ளார்.

நடிகை தமன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் ,

“நான் இந்த இயக்கத்தின் மீது உண்மையான நம்பிக்கை கொண்டுள்ளேன். எதிர்கால தலைமுறைக்காக மண் வளத்தை காக்க வேண்டியது நம்முடைய பொறுப்பு. இது தொடர்பான நம்முடைய உரையாடல் ஆழ்ந்த அர்த்தம் மிகுந்ததாக உள்ளது. நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் மண் வளத்தை பாதுகாக்கலாம்” என பதிவிட்டுள்ளார்.

இதே போன்று, மற்ற பிரபலங்களும் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். இதற்கு சத்குருவும் அவர்களுக்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க