• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிட்ரா முதல் குரும்பபாளையம் வரை சாலை விரிவாக்கம் பணிகளை விரைந்து செய்ய கோரிக்கை

April 20, 2022 தண்டோரா குழு

கோவை அவிநாசி சாலை சிட்ராவில் இருந்து நேருநகர் அருகே காளப்பட்டி வழியாக குரும்பபாளையம் சந்திப்பு வருகிறது. இதன் வழியாக சத்தியமங்கலம் – மைசூர் செல்லும் சாலை உள்ளது.

அது போல குரும்பபாளையத்தில் இருந்து வெள்ளக்கிணறு, துடியலூர் சென்று மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி செல்லும் சாலை உள்ளது.சிட்ராவிலிருந்து காளப்பட்டி வழியாக சத்தியமங்கலம் சாலை, மேட்டுப்பாளையம் சாலை ஆகிய இரண்டு முக்கிய சாலைகளை இணைக்கும் வகையில் இவ்வழி அமைந்துள்ளது.இதனால் இச்சாலையில் வாகன போக்குவரத்து எந்நேரமும் இருந்து கொண்டிருக்கும்.மேலும் விமான நிலையத்தில் இருந்து வரும் முக்கிய பிரமுகர்கள் ஊட்டி செல்வதற்கு நேரு நகர் காளப்பட்டி வழியாக மேட்டுப்பாளையம் சாலை சென்றடைந்து ஊட்டி செல்கின்றனர்.

இதனால் இச்சாலையில் எந்நேரமும் போக்குவரத்து நெரிசலில் இருந்து கொண்டே இருப்பதை கருத்தில் கொண்டு சிட்ரா முதல் குரும்பபாளையம் வரை சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.அதையடுத்து 2018 ஆம் ஆண்டு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது.ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இதுகுறித்து கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் செயலாளர் லோகு கூறுகையில்,

அவினாசி சாலை சிட்ரா முதல் நேரு நகர் காளப்பட்டி குரும்பபாளையம் வரை காலை மற்றும் மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் நேரு நகரில் இருந்து வீரியம்பாளையம் திரும்பும் வளைவில் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. அதுபோல காளப்பட்டி சந்திப்பில் சாலை மிக குறுகலாக உள்ளதால் காலையில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ளது. இதனால் கல்லூரிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து செல்லும் நிலை உள்ளது.

தமிழக அரசு நிதி ஒதுக்கி 4 ஆண்டுகளாகியும் இதுவரை வருவாய் துறையினர் நில எடுப்பு பணிகளை விரைந்து செய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்றார்கள்.மேலும் சிட்ரா முதல் காளப்பட்டி வரை ஏராளமான நிரந்தர ஆக்கிரமிப்புகள், நடைபாதை கடைகளால் சாலையில் செல்வதற்கு கடும் நெருக்கடி ஏற்படுகின்றன. இதனை கருத்தில் கொண்டு நெடுஞ்சாலைத் துறையும், வருவாய்த் துறையும் நில எடுப்பு பணிகளை விரைந்து முடித்து சாலை விரிவாக்கம் செய்ய உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், என்றார்.

மேலும் படிக்க