April 22, 2022 தண்டோரா குழு
கோவை நிர்மலா கல்லூரியில் உலக பூமி தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு மூலிகைச் செடி மற்றும் மரக்கன்றுகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
உலக பூமி தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதில் உலக வெப்பமயமாதலை தடுக்க மரக்கன்றுகளை நட வேண்டும் என விழிப்புணர்வு செய்யப்படுகிறது.
இந்த நிலையில் இன்று கோவை சுங்கம் பகுதியில் உள்ள நிர்மலா கல்லூரியில் உலக வெப்பமயமாதலை தடுக்க மரக்கன்றுகளை நடுவோம் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து மாணவிகள் சாலையில் சென்ற பொதுமக்களுக்கு மூலிகைச் செடி மற்றும் மரக்கன்றுகளை கொடுத்தனர்.
மேலும் பூமியை பாதுகாப்போம், இயற்கை வளங்களை பாதுகாப்போம், மரக்கன்றுகளை நடுவோம் என மாணவ மாணவிகள் உறுதிமொழி எடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.