April 28, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன.
கோவை மாநகராட்சி பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு, வீடாக சென்று குடிநீர் தொட்டி, தண்ணீர் தொட்டி, தண்ணீர் தேங்கக் கூடிய வாய்ப்புள்ள இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தண்ணீர் தொட்டிகளில் அபேட் மருத்துகளை ஊற்றுகின்றனர்.
அதே போல் வீட்டில் மற்றும் அருகில் தேவையில்லாத பொருட்களில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். பழைய டயர்கள், பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும் என விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து கோவை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,
‘‘கோவை மாநகராட்சியில் ஒரு வார்டுக்கு 10 பேர் என 100 வார்டுகளில் 1000 களப்பணியாளர்கள் வீடுவீடாக சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்,’’ என்றார்.