April 28, 2022 தண்டோரா குழு
கலஷா பைன் ஜூவல்ஸ் நிறுவனத்தின் அபர்ணா சுங்கு வடிவமைத்த கைவினை தனித்துவமிக்க நகைகள் நகைக்கண்காட்சி கோவையில் இன்று துவங்கியது.
கோவை அவிநாசி ரோட்டில் உள்ள தி ரெசிடென்ஸி டவர் ஓட்டலில் ஏப்ரல் 28, 29, 30 ஆகிய நாட்களில் நடக்கிறது. இந்நிலையில், இதன் துவக்க விழா இன்று நடைபெற்றது. நிகழ்வில் கவுரவ விருந்தினர்களாக பிரியங்கா சுந்தர், பிஸ்தா தேவி ஜஜரியா, ரஷிதா எம் ராஜா மற்றும் டாக்டர் கற்பகம் முரளி ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கண்காட்சியில் கலஷா பைன் ஜூவல்ஸ் தனித்துவமிக்க சிறப்பான முறையில் அபர்ணா சுங்குவால் வடிவமைக்கப்பட்டு கைவினை கலைஞர்கள் உருவாக்கிய நகைகள் வைக்கப்பட்டுள்ளன.
அனைத்து விதமான சொகுசான, சிறப்பான இந்த கண்காட்சியில், தங்கம், வைரம் மற்றும் ஜடவ் நகைகள் இடம் பெற்றுள்ளன.கலஷா பொக்கிஷம் வகையில் இந்தியாவின் மிக அழகுவாய்ந்த தங்கம், வைரம், மற்றும் பிளாட்டினம் இடம் பெறுகிறது. கண்காட்சிக்கு பிரத்யோகமாக நகைககளை தயார் செய்யும் நாட்டிலேயே திறமை வாய்ந்த வடிவமைப்பாளர்கள் வடிவமைத்த சிறப்பான கலை நயமிக்க நகைககள் இதில் இடம் பெற்றுள்ளது.
இப்புதிய பாரம்பரியமிக்க கலை நயமிக்க மணப்பெண் நகை தொகுப்பும் கோவை வாடிக்கையாளர்களுக்கு இங்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. ஜடாவ் வகை நகைகள் இந்திய கலைகளின் ஆணிவேராக திகழ்கிறது. கோவில் நகைககள், ஒவ்வொரு நாளும் அணியும் வகையிலான அழகிய நகைகள், விழாக்கால நகைகள் என பலவகைகள் அனைவரையும் கவரும் வகையில் கண்காட்சி நடக்கிறது.
துவக்க விழாவில், கலஷா இயக்குனர் அபிஷேக் சந்தா பேசுகையில்,
“பாரம்பரியமிக்க, மரபு வழிவந்த இந்த நகைகள், கோவை மக்களுக்காக தேர்வு செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மிகவும் சிறப்பான வடிவமைப்பில் தேர்வு செய்யப்பட்ட இவை, அனைவரையும் கவரும். நாகரீக மாற்றத்தில் மணமகள் விரும்பும் வகையிலான நவீனநகைககளும் அவர்களது தனிப்பட்ட விருப்பத்திலான நகைகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு நகையிலும் இந்த நகைகளில், பாரம்பரியமும் நவீனமும் கலந்திருக்கும் என்றார்.