April 30, 2022
தண்டோரா குழு
கோவை மாநகராட்சியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.கொரோனா தடுப்பூசி முகாம் தொடர்பாக வார்டு ஒன்றிற்கு 3 பூத்கள் மற்றும் நிலையம் ஒன்றிற்கு 1 மொபைல் பூத் என்ற அடிப்படையில் மொத்தம் 325 பூத்களில் தடுப்பூசி போடப்பட்டது.
இதில் கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.19க்குட்பட்ட மணியகாரன்பாளையம் மாநகராட்சி பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அதே போல் மேற்கு மண்டலம் ஆர்.கே.பாய் நகர் நல மையத்தில் மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த முகாம்களில் ஒரே நாளில் முதல் தவனை தடுப்பூசி 622 பேர் செலுத்தி கொண்டனர். இரண்டாம் தவனை தடுப்பூசி 3541 பேர் செலுத்தி கொண்டனர், பூஸ்டோர் டோஸ் 2917 பேர் செலுத்தி கொண்டனர்.15-18 வயதுடையவர்கள் 185 பேர் செலுத்தி கொண்டனர். 12-14 வயதுடையவர்கள் 2556 பேர் செலுத்தி கொண்டனர். ஆக மொத்தம் மாநகராட்சி பகுதியில் 9821 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.